இனிவருகின்ற காலம் எமது பகுதி மாணவர்களுக்கு சோதனைக் காலமாகும். போட்டியிட்டு கற்ககூடிய வாய்ப்பை மாணவர்கள் உருவாக்கிகொள்ளவேண்டும்.இல்லாதுபோனால் இந்த நாட்டில் சீரழிந்துபோன சமூகமாக தமிழ் சமூகம் மாறும் துர்ப்பாக்கிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சென்றமுறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்பெற்றுக்கொண்டது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மத்தி என்னும் கல்வி வலயம்.அது நூறுவீதம் முஸ்லிம் பாடசாலைகளைக்கொண்ட கல்வி வலயமாகவுள்ளது.
இம்முறை உயர்தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2500 மாணவர்கள் மூன்று பாடங்களில் ஏ சித்திபெற்ற நிலையிலும் பல்கலைக்கழகம் செல்லமுடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது.இது இலங்கையின் கல்வி நிலை எந்தளவுக்கு உள்ளது என்பதைக்காட்டுகின்றது.

மட்;டக்களப்பு மாவட்டத்தில் கூட வர்த்தக பிரிவில் தோற்றிய மாணவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் மூன்று ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். அவர்களில் பலருக்கும் பல்கலைக் கழகம் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
இந்த நிலையை பார்க்கும்போது நாங்கள் கல்வியிலே எந்தளவு ஆக்கமும் ஊக்கமும் கொள்ளவேண்டும் என்பதை ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம்.
இன்று இனங்களிடையே கல்வியிலே போட்டி. மற்றைய மாணவர்களுடன் ஒப்பிடும்போது எமது கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.30வருடகால போராட்டத்தில் நாங்கள் கல்வியை மட்டும் இழக்கவில்லை.எமது பொருளாதாரத்தையும் இழந்திருந்தோம்.அப்படியிருக்கையில் எமது கல்வியின் நிலையென்ன.
கடந்த காலங்களில் வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கிய பாடசாலை இம்முறை தொழில்சார் பல்கலைக்கழக அனுமதியெதனையும் பெறவில்லை.இதனை நாங்கள் எவ்வாறு சீர்செய்யலாம். இழந்த கல்வியை நாங்கள் பெறவேண்டுமானால் பெற்றோர்களும் மாணவர்களும் ஊக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களாக இருக்கின்றபோது ஒழுக்கசீலர்களாக இருக்க வேண்டும்.
கல்லாறைப்பொறுத்தவரை உச்சக்கட்டத்தில் இருந்த கல்விநிலை இன்று இறக்கத்திலுள்ளது. வெளிநாட்டு மோகம் அவுஸ்திரேலியா மோகம் தொலைக்காட்சி தொலைபேசி போன்ற மோகங்களால் எமது கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது. சில இடங்களில் சிலசில பிரச்சினைகள் இருக்கின்றபோதும் நாம் எமது கல்வியில் நாட்டம் செலுத்தாமல் மற்றைய விடயங்களில் நாட்டம் கொள்கின்றபோது எமது கல்வி பாதிக்கப்படுகின்றது.
மூன்று பாடங்களில் ஏ சித்திபெற்றும் பல்கலைக்கழகம் செல்லமுடியாத நிலையில் மூன்று எஸ் சித்தி பெற்று எவ்வாறு பல்கலைக்கழகம் செல்லமுடியும். இனிவருகின்ற காலம் எமது பகுதி மாணவர்களுக்கு சோதனைக் காலமாகும். போட்டியிட்டு கற்ககூடிய வாய்ப்பை மாணவர்கள் உருவாக்கிகொள்ளவேண்டும்.இல்லாதுபோனால் இந்த நாட்டில் சீரழிந்துபோன சமூகமாக மாறும் துர்ப்பாக்கிய நிலையேற்படும்.
கல்வியிலும் கரிசனையாகவிருங்கள். அப்போது தான் நாம் கல்வியில் முன்பிருந்த நிலையை அடைய முடியும். பாடசாலை கண்ணாடிகளை உடைத்தல் ஒழுக்கமின்றி நடத்தல் போன்ற சில நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடும்போது எவ்வாறு கல்வியில் முன்னேற முடியும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும்.
பாடசாலைகள் படிப்பதற்காக இருக்கின்றதே தவிர இடிப்பதற்காக அல்ல. பாடசாலையில் ஒரு கட்டிடத்தை அமைப்பதற்காக பல வருடங்கள் அலைய வேண்டியிருக்கின்றது. அப்படியிருக்கும்போது அக்கட்டிடத்தை இடிக்கின்ற சமுதாயத்தை நாங்கள் உருவாக்கினால் எந்த வகையில் முன்னேற முடியும். மாணவர்கள் இந்த அடாவடித்தனங்களை விடுத்து கல்வியில் கரிசனையாகவிருக்க வேண்டும்.

இலங்கையில் மட்டக்களப்பு மத்தி என்று சொல்லப்படுகின்ற முஸ்லிம் வலயம் முதலாவதாக வந்திருக்கின்றது. இதற்காக நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். பட்டிருப்புத் தொகுதி மிகவும் படித்தவர்கள் வாழ்கின்ற தொகுதியென்று பெயர் பெற்ற தொகுதியாகும். அந்தத் தொகுதி இந்த மாவட்டத்தில் கூட முதலாவதாக வர முடியாததற்கு காரணம் என்ன.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டுமென்பதில் அக்கறையாக இருக்கின்றார்கள். பெற்றோர்களின் முயற்சியினால் தான் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைகின்றார்கள். அந்த முயற்சி பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லும்வரை இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாங்கள் எங்கள் பகுதிகளில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

கடந்த காலத்தில் போராட்டத்தினால் எமது கல்வியை இழந்தோம். பாடசாலைக் கட்டிடங்களை இழந்தோம். பொருளாதாரத்தை இழந்தோம். தொழில் செய்ய முடியாமலிருந்தோம். இன்று ஓரளவு வழமைநிலைக்கு திரும்பியிருக்கும்போது நாம் கல்வியில் பழைய நிலையை அடைய வேண்டும்.
பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான விளையாட்டுப்போட்டிகளின்போது கல்வி அதிகாரிகள் அந்த நிகழ்வுகள் முடியும்வரையில் இருக்கவேண்டும்.அரசியல்வாதிகள் நிகழ்வில் கலந்துகொள்வதைவிட கல்வி அதிகாரிகள் முக்கியமாக இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும்.
இந்த நிகழ்வில் கல்வி அதிகாரி ஒருவர் தொடர்ந்து பங்குபற்றாதது கவலைக்குரிய விடயம்.எனினும் இறுதி நிகழ்வில் வலய பணிப்பாளர் கலந்துகொண்டதானது மகிழ்ச்சியை தருகின்றது.
எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படுவதை அனுமதிக்கமுடியாது.பாடசாலைகளின் நிகழ்வை மிக முக்கியமாக கல்வி அதிகாரிகள் இறுதிவரையிருந்து அவர்களின் நிகழ்வை கண்டு அது தொடர்பில் தங்களது மதிப்பீகளை வழங்கவேண்டும்.
ஆனால் இங்கு அது நடைபெறவில்லை.இது தொடர்பில் நான் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவும் தயங்கப்போவதில்லை.பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளில் கல்வி அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
Battinews