2011 க.பொ.த உ/த பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள் மார்ச் 9ம் திகதிவரை மேன்முறையீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் இறுதிக்குள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.