எதிர்வரும் 2015ஆண்டிலிருந்து அமுலில் வரவுள்ள கலைத்திட்ட மாற்றத்திற்கு அமைவாக பாடசாலைகளில் ஆரம்பக்கல்விப் பாடத்திட்டத்தை தயாரிக்கவும், அதற்கான நியமங்களைத் தயார்செய்யும் நோக்குடன் தேசிய கல்வி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ஆராய்சி திட்டத்திற்கு நாடுமுழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய ஆலோசர்களுக்கான இருநாள் பயிற்சி தேசிய கல்வி நிறுவக மண்டபத்தில் இம்மாதம் 09மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இதில் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சரச்சந்திர மற்றும் கலாநிதி தரங்கள, கலாநிதி சோமரத்ன மற்றும் உதயச் சந்திரன் ஆகியோர் வளவார்களாகக் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மூதூர், மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, திருக்கோவில் ஆகிய வலயங்களிலிருந்து எட்டு ஆசிரிய ஆலோசகர்களும் கலந்துகொண்டனர். நியமங்களைத் மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களிடமிருந்து பெறப்படுகின்ற மூலாதாரங்களைக் கொண்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படவிருப்பதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சரச்சந்திர தெரிவித்தார்.
மேலும் மாணவர்களை ஆய்வு செய்வதற்கான படிவங்களும் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்காக வலயங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளிலிருந்து குறித்த மாணவர்களிடம் வினாக்கொத்துக்கள் நியமங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வலயங்களிலிருந்து முறையே அஸ் -ஸிபா வித்தியாலயமும், தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கரைப்பற்று வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்துள்ளார். மேற்படி தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற பயிற்சியில் குறித்த ஆசிரிய ஆலோசகர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.