அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, February 22, 2013

யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம்!


الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًاஇன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3)

விளக்கம்:
இந்த வசனத்தின் சிறப்பையும் அது எப்போது இறக்கப்பட்டது என்பதையும் உமர் (ரலி) அவர்கள் கீழ்வருமாறு விளக்குகிறார்கள்.

45 حدثنا الْحَسَنُ بن الصَّبَّاحِ سمع جَعْفَرَ بن عَوْنٍ حدثنا أبو الْعُمَيْسِ أخبرنا قَيْسُ بن مُسْلِمٍ عن طَارِقِ بن شِهَابٍ عن عُمَرَ بن الْخَطَّابِ أَنَّ رَجُلًا من الْيَهُودِ قال له يا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ في كِتَابِكُمْ تقرؤونها لو عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذلك الْيَوْمَ عِيدًا قال أَيُّ آيَةٍ قال ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا ) قال عُمَرُ قد عَرَفْنَا ذلك الْيَوْمَ وَالْمَكَانَ الذي نَزَلَتْ فيه على النبي (ص) وهو قَائِمٌ بِعَرَفَةَ يوم جُمُعَةٍ

‘யூத இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம், ‘அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் மாத்திரம் யூத இனமாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்,

‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3)

என்ற வசனம் தான் அது என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ் வசனம் இறங்கியது)’ என பதில் கூறினார்கள்.

என உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(நூல்: புகாரி 45)