இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்காக உயர்கல்வி புலமைபரிசில் வழங்கும் வைபவம் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள அகில இலங்கை வைஎம்எம்ஏ இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது.
இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்துக்கு, இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஸ்மி ஸெய்னுதீனும் அவரது பாரியான எலியாஸ் பாசாவும் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.
முன்னாள் மலேசிய தூதுவரான நஸீரா ஹுசைன் தனது தந்தையான டத்தோ .ஹுசைன் பின் மொஹமதின் ஞாபகர்த்தமாகவே இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை மேற்கொள்ளும் 50 மாணவ மாணவிகளுக்கு இந்த புலமை பரிசில்கள் வழங்கப்பட்டன.
அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிக 50 பேருக்கு இந்த வைபத்தின் போது மேற்படி புலமை பரிசிலகள் வழங்கப்பட்டன.
அகில இலங்கை வைஎம்எம்ஏ இயக்கத்தின் தேசிய தலைவர்.தேசபந்து கே.என் டீன், வைஎம்எம்ஏ இயக்கத்தின் சர்வதேச ஆலோசகர் காலித் பாரூக், இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய மர்ளியா சித்தீக், பொருளாளர் தேசமான்ய பவாஸா தாஹா உட்பட பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
tamil news .lk