பரீட்சைகள் திணைக்களத்தில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதன்போது சுமார் 92 பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
அத்தகைய சம்பவங்களை தடுக்கும் பொருட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.