கடந்த ஜனவரி மாதம் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றத்தின்படி பெப்ரவரி தொடக்கம் அவரவருக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளில் கடமையைப் பொறுப்பேற்கப்பட வேண்டும் எனவும், வழங்கப்பட்ட இடமாற்றம் எவ்விதத்தில் எதுவித மாற்றமும் செய்ய முடியாத எனவும் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை தொடர்ந்தும் குறித்த பாடசாலைகளில் வைத்திருந்தால் அவ் அதிபர்களின் சம்பளத்தில் ஒருபகுதி அறவிடப்படும் எனவும் அதிபர்களுக்கான கூட்டத்தில் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு பாடசாலையில் இருந்து சுமார் 10 தொடக்கம் 20 வரையான ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கொழும்பு நகரில் பல பாடசாலைகளில் இவ் இடமாற்ற நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறாதுள்ளதுடன் பல பாடசாலைகளில் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்குப் பதிலாக ஆசிரியர்கள் செல்லாததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாதிருப்பதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.