அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, February 18, 2013

நரகம்- ஓர் சிறிய அறிமுகம்.


அன்புள்ள சகோதரர்களே, தன்னுடைய வேதமறையில் அல்லாஹ் நரகத்தைப் பற்றி பலவாறு எடுத்துக்கூறி நம்மை எச்சரிக்கிறான். அங்குள்ள பல்வேறு வகையான கடும் வேதனைகளைப் பற்றி எடுத்துச் சொல்கிறான். அவற்றைக் கேட்டாலே குலை நடுங்குகின்றது. தொண்டைக்குழி அடைத்துக் கொள்கின்றது.

நம்மீது கருணையின் காரணத்தினால் தான் இவற்றையெல்லாம் அவன் எடுத்துச்சொல்லி நம்மை எச்சரிக்கிறான். அங்குள்ள பல்வேறு ஆபத்துகளை சுட்டிக் காட்டுகிறான். நம்முடைய எச்சரிக்கை உணர்வும் பயமும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக.

இறைவனுடைய வேதத்திலும் நபிமொழிகளிலும் நரகத்தைப் பற்றி வந்துள்ள குறிப்புகளைக் காணலாம் வாருங்கள். ஒருவேளை நமக்கு அவை பயனளிக்கக் கூடும்.

39:54 -திரும்பி விடுங்கள், உங்கள் இறைவனின் பக்கம்! மேலும், அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு உங்கள்மீது வேதனை வருவதற்கு முன்பாகவே! பிறகு, எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது.

39:55 -உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுங்கள்; நீங்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக!

இறைகூற்று

3:131---- இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள்.

இப்லீஸைப் பார்த்து இறைவன் சொல்கிறான்.

15:42- திண்ணமாக, என்னுடைய வாய்மையான அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது. ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகின்றார்களோ, அவர்களிடம் மட்டும் உனது அதிகாரம் செல்லுபடியாகும்.

15:43- திண்ணமாக, அத்தகையவர்கள் அனைவர்க்கும் நரகம் இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.”

15:44-- -(இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இறைகூற்றாவது...

18:29 -தெளிவாகக் கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடு கெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் தீயதாகும்.

இறைகூற்றாவது...

39:71-- (இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப் படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: “உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக் கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக் கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது” என்று பதிலளிப்பார்கள்.

இறைகூற்றாவது...

67:6 -எவர்கள் தங்களுடைய அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கின்றது. அது மிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும்.

67:7 -அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும்

67:8 -கடுமையான கோபத்தால் வெடித்து விடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும் போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று!

இறைகூற்றாவது...

76:4- நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.

இறைகூற்றாவது...

29:55 -மேலும், அந்நாளை (இவர்கள் அறிந்து கொள்வார்கள்) அன்று வேதனை இவர்களின் மேலிருந்தும், இவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் இவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். மேலும், கூறுவான்: “இப்பொழுது சுவையுங்கள், நீங்கள் செய்து கொண்டிருந்த இழிசெயல்களின் விளைவை!”

இறைகூற்றாவது...

39:16 -அவர்கள் மீது நெருப்புக் குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

இறைகூற்றாவது...

56:41 -மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?

56:42 -அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும்

56:43 -கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள்.

56:44 -அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது

இறைகூற்றாவது...

9:81 -போருக்குச் செல்லாமல் தங்கிவிட அனுமதி பெற்றவர்கள், அல்லாஹ்வின் தூதர் புறப்பட்டதற்குப் பின்னால் தத்தம் வீடுகளில் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணித்துப் போராடுவதை வெறுத்தார்கள். மேலும், ‘கடுமையான இந்த வெப்ப காலத்தில் போருக்குப் புறப்படாதீர்கள்’ என்று (மக்களிடம்) கூறினார்கள். (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “நரக நெருப்பு இதைவிட அதிக வெப்பமுடையது.” அந்தோ! இதனை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டாமா!

இறைகூற்றாவது...

101:10 -அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?

101:11 -கொழுந்து விட்டெரியும் நெருப்பு!

இறைகூற்றாவது...

54:47 -இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும், இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது.

54:48 -இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!”

இறைகூற்றாவது...

74:27 -மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன?

74:28 -அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது!

74:29 -அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது.

இறைகூற்றாவது...

66:6 -இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்

இறைகூற்றாவது...

77:32 -அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.

77:33 -அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்.

இறைகூற்றாவது...

14:49 -அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக! அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர்.

இறைகூற்றாவது...

40:71 -அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும்.

இறைகூற்றாவது...

22:19 -இவர்கள் தங்களுடைய இறைவனைப் பற்றி தர்க்கம் புரிந்து கொண்டிருக்கும் இரு பிரிவினர் ஆவர். (இவர்களில்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நெருப்பு ஆடைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய தலைகளின் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும்.

22:20 -அதனால் இவர்களின் தோல்கள் மட்டுமல்ல; வயிற்றினுள் இருக்கும் பகுதிகளும் வெந்து உருகிவிடும்!

22:21 -மேலும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காக இரும்புச் சம்மட்டிகள் இருக்கின்றன.

22:22 -மன வேதனையினால், நரகத்திலிருந்து வெளியேற அவர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், “சுட்டெரிக்கும் தண்டனையைச் சுவையுங்கள்” என்று மீண்டும் அதிலேயே தள்ளப்படுவார்கள்.

இறைகூற்றாவது...

4:56 -எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

இறைகூற்றாவது...

44:43 ---‘ஸக்கூம்’ மரம்;

44:44 -பாவியின் உணவாக இருக்கும்.

44:45 -அது எண்ணெய்க் கசடு போலிருக்கும்.

44:46 -சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும்.

இறைகூற்றாவது...

37:64 -அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து முளைத்து வருகின்ற ஒரு மரம்.

37:65 -அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும்.

37:66 -நரகவாசிகள்தாம் அதனைத் தின்பார்கள். மேலும் அதனைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள்.

இறைகூற்றாவது...

56:51 -பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!

56:52 -நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்!

56:53 -நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள்.

56:54 -அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள்,

56:55 -அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று!

இறைகூற்றாவது...

18:29 -தெளிவாகக் கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகிவிட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடு கெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் தீயதாகும்.

இறைகூற்றாவது...

47:15 -இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மகத்துவம் இதுவே: அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு எல்லாவிதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும். (இத்தகைய சுவனப்பேறுகளைப் பெறும் மனிதர்களுக்கு) நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாக்கப்படுகின்றவர்கள் ஒப்பாவார்களா?

இறைகூற்றாவது...

14:16 -இனி, அவனுக்கு நரகம்தான் இருக்கின்றது. அங்கு அவனுக்குச் சீழ் புகட்டப்படும்.

14:17 -அதனை அவன் கஷ்டப்பட்டு விழுங்க முயல்வான்; எனினும், அதனை எளிதில் விழுங்கிட அவனால் முடியாது. அனைத்துத் திசைகளிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வரும். ஆயினும், அவனால் மரணம் அடைய முடியாது. அதைத் தவிர ஒரு கடும்வேதனை அவன் உயிரை வதைத்துக் கொண்டிருக்கும்.

இறைகூற்றாவது...

43:74 -குற்றவாளிகளோ நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.

43:75 -அவர்களின் வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நிராசையுற்றிருப்பார்கள்.

43:76 -நாம் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே கொடுமை இழைத்துக் கொண்டார்கள்.

43:77 -அவர்கள் மன்றாடுவார்கள்: “மாலிகே! உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடித்துவிட்டால் நன்றாய் இருந்திருக்குமே!” அவர் பதிலளிப்பார்: “நீங்கள் இப்படியே கிடப்பீர்கள்!

இறைகூற்றாவது...

17:97 -யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் எவர்களை வழிகேட்டிலே ஆழ்த்துகின்றானோ அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து வேறு எந்தப் பாதுகாவலரையும் நீர் காணமாட்டீர். மறுமைநாளில் நாம் அவர்களை முகம் குப்புற இழுத்து வருவோம்; குருடர்களாய்; செவிடர்களாய் மேலும், ஊமையர்களாய்! அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அதன் வெப்பம் தணியத் தொடங்கும்போது நாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியும்படிச் செய்வோம்.

இறைகூற்றாவது...

4:169 -அவர்களுக்கு நரகத்திற்கான வழியினைத் தவிர வேறெந்த வழியையும் காட்டவும் மாட்டான். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்து கிடப்பார்கள்! இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான செயலே ஆகும்.

இறைகூற்றாவது...

33:64 -எவ்வாறாயினும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் திண்ணமாகச் சபித்துவிட்டான். மேலும், அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துவிட்டிருக்கின்றான்;

இறைகூற்றாவது...

72:23 -அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை.” இனி, எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் திண்ணமாக அவருக்கு நரக நெருப்பு இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.

இறைகூற்றாவது...

104:5 -மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன?

104:6 -அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;

104:7 -இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது;

104:8 -நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்.

104:9 -உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்)

இவையல்லாமல் நரகத்தைப் பற்றியும் அதன் கொடும் வேதனைகளைப் பற்றியும் விவரிக்கும் இறைவசனங்கள் இன்னும் ஏராளமானவை உள்ளன.

அடுத்து, இதைப்பற்றிய நபிமொழிகளைப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, கியாமத் நாளன்று எழுபதாயிரம் விலங்குகளால் பூட்டப்பட்டு நரகம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு விலங்கையும் எழுபதாயிரம் வானவர்கள் பற்றி இழுத்துக் கொண்டு வருவார்கள்’ என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (முஸ்லிம்)

புகாரியிலும் முஸ்லிமிலும் அபூ ஹுரைரா அறிவிக்கும் தகவலொன்று பதிவாகியுள்ளது. அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆதமுடைய மக்கள் எரிக்கின்றார்களே, உங்களுடைய இந்த நெருப்பு நரக நெருப்பன் எழுபதில் ஒரு பாகமாகும்’ என்றார்கள். ‘இறைவனின் தூதரே, இதுவே போதுமே’ என்றார்கள் மக்கள். ‘நரக நெருப்பு இதைவிட அறுபத்து ஒன்பது மடங்கு அதிகமாக இருக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் வெப்பத்தில் இதைப் போன்றே இருக்கும்’ என்றார்கள் அண்ணலார்.

அபூ ஹுரைரா அறிவிக்கும் பறிதோர் அறிவிப்பல், நாங்கள் ஒரு தடவை அண்ணலாரோடு அமர்ந்திருந்தோம். அப்போது (தடாலென்று ஏதோ) கீழே விழும் சப்தம் கேட்டது. இது என்னவென்று தெரியுமா?’ என அண்ணலார் விசாரித்தார்கள். இறைவனும் அவன் தூதரும்தான் நன்கறிவார்கள்’ என்றோம் நாங்கள். அதற்கு அண்ணலார், எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக நரகத்தில் தூக்கி எறியப்பட்ட கல்லொன்று இப்போதுதான் அதன் அடியாழத்தில் போய் விழுகின்றது. அந்த சப்தம்தான் இது’ என்றார்கள். (முஸ்லிம்)

ஒருமுறை உத்பா இப்னு கஸ்வான் உரையாற்றுகையில் கூறினார்கள், நரகத்தின் விளிம்பல் இருந்து தூக்கி எறியப் பட்ட கல்லொன்று எழுபதாண்டுகள் ஆன பின்பும் அதன் அடியாழத்தை தொடவில்லை என கூறுவதை நாங்கள் கேட்டுள்ளோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அந்நரகம் நிரப்பப்பட்டு விடும். (முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது, ஸக்கூம் உடைய ஒருதுளி மண்ணுலகில் விழுந்தால் மண்ணுலகில் வாழ்வோரின் வாழ்க்கையை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்’ என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (நஸாயி, திர்மிதீ, இப்னு மாஜா)

நுஃமான் இப்னு பஷீர் அறிவிப்பதாவது, நரகத்திலேயே மிகக் குறைந்த வேதனை ஓர் ஆளுக்கு வழங்கப்படும். அதாவது, அவருக்கு நெருப்பனாலான செருப்புகளும் காலணிகளும் அணிவிக்கப்படும். அதன் சூட்டினால் அவருடைய மூளை உருகியோடும். நரகத்திலேயே தனக்குத்தான் மிகக்கொடிய வேதனை அளிக்கப்படுவதாக அவர் எண்ணுவார். ஆனால், அதுதான் மிகக்குறைந்த வேதனையாக இருக்கும்’ (முஸ்லிம், புகாரி)

அனஸ் இப்னு மாலிக் அறிவிப்பதாவது, இவ்வுலகில் பெரும்பெரும் அருட்கொடைகளை அனுபவித்தவர்கள் நரகில் கிடப்பார்கள். அவர்களிடம், ஆதமின் மகனே, இதற்கு முன் நீ எப்போதாவது ஏதாவது அருட்கொடையை அனுபவித்து இருக்கிறாய?’ என விசாரிக்கப்படும். அதற்கவன், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை, இறைவனே’ என்பான்’.

இவ்வுலகில் கஷ்டங்களில் உழன்றவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். அவர்களிடம், ஆதமின் மகனே, இதற்கு முன் நீ எப்போதாவது ஏதாவது கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறாயா?’ என விசாரிக்கப்படும். அதற்கவன், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை, இறைவனே’ என்பான் என அண்ணலார் கூறினார்கள்’. (முஸ்லிம்)

அதாவது நரகவாசிகள் இந்த உலகத்தில் அனுபவித்த அத்தனை அருட்கொடைகளையும் சுத்தமாக மறந்து போயிருப்பார்கள். சொர்க்கவாசிகள் இந்த உலகத்தில் பட்ட கஷ்டங்களை அத்தனையையும் மறந்து போயிருப்பார்கள்.

அனஸ் மறுபடியும் அறிவிக்கிறார்கள், அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், இறுதித் தீர்ப்பு நாளன்று ஒரு நரகவாசியிடம், உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் உன்னிடம் இருந்தால் அவற்றை நஷ்ட ஈடாகச் செலுத்த நீ விரும்புவாயா?’ என வினவப்படும். அதற்கவன், ஆமாம் என்பான்.

இதைவிட எளிய விஷயத்தை நீ செய்திருந்தால் இந்தக் கொடுமையில் இருந்து தப்பயிருக்கலாமே, நீ மண்ணில் வசித்தபோது அதுதானே உன்னிடம் கோரப்பட்டது. இறைவன் என்று கண்டதையும் எண்ணாதே என்றுதானே உன்னிடம் சொல்லப்பட்டது. நீயோ அதனை ஏற்காது புறக்கணித்தாய். என்னைவிட்டு விட்டு வேறு எதுஎதையோ இறைவனாகக் கருதினாய்’ என சொல்லப்படும். (அஹ்மத், மற்றும் புகாரி, முஸ்லிம்)

இப்னு உமைய்யா வாயிலாக இப்னு முர்தவைஹ் அறிவிப்பதாவது, அல்லாஹ் நரக வாசிகளுக்காக ஒரு மேகத்தை உண்டாக்குவான். அது அவர்களுக்கு மேலாக தோன்றும்போது, நரக வாசிகளே, எதை நீங்கள் விரும்புகிறீர்கள்? எதை நீங்கள் கேட்கிறீர்கள்?’ என்றொரு குரல் எழும்பும். அதைக் கண்டதும் அவர்களுக்கு உலகத்து மேகப்பொதிகளும் அவை கொட்டிய அடைமழையும் நினைவுக்கு வரும்.

எங்கள் இறைவா, பொழிவாயாக’ என அவர்கள் பிரார்த்திப்பார்கள். அப்போது அவர்கள் மீது விலங்குகள் பொழியப்படும், ஏற்கனவே அவர்கள் மீதுள்ள விலங்குகள் மேலும் பன்மடங்காக அதிகரித்துவிடும். அவர்கள் மீது சங்கிலிகள் பொழியும், ஏற்கனவே அவர்கள் மீது பிணைக்கப்பட்டுள்ள சங்கிலிகள் அதிகமாகிவிடும். நெருப்பை அவர்கள் மீதாக உமிழும் கற்கள் பொழியப்படும்.

அபூ மூஸா அறிவிப்பதாவது, அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், மூன்று நபர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவே மாட்டார்கள். (1) சதாசர்வகாலமும் மதுவிலேயே மிதப்பவன் (2) உறவுகளை முறிப்பவன் (3) சூனியத்தை உண்மையென நம்புபவன்.

எந்நேரமும் குடியிலேயே இருப்பவன் செத்துப்போனால் அவனை மூழ்கோடையில்’ முக்கப்படும் என்றார்கள் அண்ணலார்.

அதென்ன மூழ்கோடை? என வினவப்பட்டது.

பாலியல் தொழிலை செய்யும் நடத்தை கெட்டவளின் மறைவிடத்தில் இருந்து வெளிப்படும் திரவ ஓடை அது. அதனுடைய வாடையால் நரகவாசிகள் கடும் துயருறுவார்கள்’

ஜாபர் ரழியல்லாஹ் அன்ஹு வாயிலாக சஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள தகவல், அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், மயங்க வைக்கும் போதை (லாகிரி) பொருள்களை நுகர்பவனுக்கு தீனத்துல் ஃகபால்’ என்னும் குடிபானத்தை அருந்தவைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகின்றது’

அதென்ன தீனத்துல் ஃகபால்? என்றார்கள் தோழர்கள்.

நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும் திரவம் அது என்றார்கள் அண்ணலார்.

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களுக்கு என்ன வேண்டும்? என யூதர்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் விசாரிக்கப்படும்.

தாகம் தாங்க முடியவில்லை எங்கள் இறைவனே, எங்களுக்கு நீர் புகட்டு’ என்பார்கள் அவர்கள்.

அவ்வளவுதானா என்றவாறு அவர்கள் அழைத்துச் செல்லப் படுவார்கள், நரகம் அவர்களுக்கு கானல் நீராக காட்சியளிக்கும். ஒருவரையொருவர் அடித்துப் படித்துக் கொண்டு ஓடோடிச் செல்வார்கள். ஒருவர்மேல் ஒருவராக நரகில் விழுவார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஹஸன் சொல்கிறார்கள், ஐம்பது ஆண்டு காலம் நின்று கொண்டே இருக்கும் ஒரு சமுதாயத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் ஒருவாய் சோற்றைக் கூட சாப்பட்டு இருக்க மாட்டார்கள், ஒரு மிடறு தண்ணீரைக் கூட குடித்திருக்க மாட்டார்கள். தாகத்தால் அவர்களுடைய கழுத்துகள் தொங்கிப் போய்விடும். பசியால் அவர்களுடைய இரைப்பைகள் பற்றியெரியும். அதன்பின்பு, அவர்கள் நரகத்திற்கு கூட்டிக் கொண்டு போகப்படுவார்கள். கொதிநீர் ஊற்றில் இருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதனுடைய சூடு கொதிக்கும்’

நரகத்தை விவரித்தவாறு இமாம் ஜவ்ஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள், தொலைதூரத்திற்கு தூக்கியெறியப்பட்டோர் குடியிருக்கும் இல்லம் அது, வழியும் வாய்ப்பும் அற்றோரின் வீடு அது. அவர்தம் ஒளியற்ற முகங்களில் இருளும் கறுப்பும் அப்பிக்கிடக்கும். எஃகு சாட்டைகளால் அவர்கள் என்றென்றும் அடிவாங்குவார்கள். கொதிநீர் ஊற்றை நோக்கி அவர்களை இழுத்துச் செல்லப்படும் காட்சியை நீங்கள் காணவேண்டும். வருத்தமும் கவலையும் அவர்களுடைய நிரந்தரச் சொத்துகள். சந்தோஷம் என்பதே அவர்களுக்குக் கிடையாது. நெருக்கடியான தங்குமிடம் அவர்களுடையது, விடுதலை என்பதே அவர்களுக்குக் கிடையாது. தொலைவும் தூரமும்தான்.

அந்நரகிற்கு காவலாளிகளாக கடுமையாக வானவர்கள் இருப்பார்கள். அவர்களுடைய கடுஞ்சொல்லோ வேதனையை விடக் கடுமையானதாக இருக்கும். தங்களுக்கு நேர்ந்ததைவிட அதிகமாக அவர்கள் விரக்தியடைவார்கள். இளமைப் பருவத்தை வீண்விளையாட்டில் செலவளித்ததை எண்ணி எண்ணி அழுவார்கள். அவர்களுடைய அழுகை அதிகமாக அதிகமாக அவர்கள் மீதாக காவலாளி வானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்லும். படைத்தவனின் கோபத்தை என்னவென்று சொல்வது?

அநீதத்தை அதிகரித்துக் கொள்வதில் அவர்கள் காட்டிய உழைப்பை என்னவென்று சொல்வது? மற்றவர்களுக்கு மத்தியில் அவர்கள் காட்டிய அகம்பாவத்தை என்னவென்று சொல்வது? அவர்கள் தீமை செய்வதில் முன்னின்று செயல்பட்டார்கள். கட்டுக் கதைகள் என்று நினைத்துக் கொண்டார்கள். பிறகு அந்த உடல்கள் யாவும் தீயில் கருகிவிடும். கருகி சாம்பலாகும் போதெல்லாம் மறுபடியும் மீட்டுக் கொடுக்கப்படும். அவர்கள் மீதோ கடுமையாக வானவர்கள் காவல் காப்பார்கள்.

இறைவா, நரக வேதனையை விட்டு எங்களைக் காப்பாயாக, இழிவின் இல்லத்தை விட்டு வேதனையின் வாசலை விட்டு எங்களை விலக்கி வைப்பாயாக, உன்னுடைய கருணையால் இறையச்சம் உடையோரும் சான்றோரும் வசிக்கின்ற பேரில்லங்களில் எங்களையும் கொண்டுபோய்ச் சேர்ப்பாயாக, இறைவா, எங்களையும் எங்கள் பெற்றோரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழுகின்ற முஸ்லிம்கள் யாவரையும் மன்னித்து அருள்வாயாக.

அருளாளர்க்கெல்லாம் அருளாளனே, உன் கருணையால் இதனைச் செய். எங்கள் தூதர் நபிநாதர் மீது பேரருள் புரிவாயாக, உன் புறத்தில் இருந்து தோன்றும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் அண்ணலாருக்கு அளிப்பாயாக, அவர்தம் இல்லத்தாருக்கும் இனிய தோழருக்கும் பேரருள் புரிவாயாக’.