அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, February 17, 2013

"இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்"

20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலேயே இஸ்லாமியப் பொருளாதாரம் என்ற எண்ணக்கரு தொடர்பான குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஷரீஆ வரையறைகளுக்கு உட்பட்டு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடையறாத தேடலின் ஒரு முக்கிய பரிமாணமே இது.

இஸ்லாம் வட்டியை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. பாரம்பரிய வங்கி முறைகள் வட்டியை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. இந்த வகையில் வட்டி வங்கி முறைகளுக்கு மாற்றீடான புதிய ஒழுங்குகளை இஸ்லாமிய உலகம் வேண்டி நின்றது. இதன் விளைவாக, இஸ்லாமியப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரயோக வடிவங்களுள் ஒன்றாக இஸ்லாமிய வங்கிகள் தோற்றம் பெற்றன. இது பலர் பங்கேற்கின்ற, பொது நன்மையை அடிப்படையாகக் கொண்ட வங்கி முறையாகும்.

தனியார் மற்றும் கூட்டு முயற்சிகளினூடான இலாபப் பகிர்வு முதலீட்டு முயற்சிகள், சீட்டு முறை போன்ற எளிய வங்கி நடைமுறைகள், முஸ்லிம் சமூகத்தினுள் பரவலாகக் காணப்படுகின்றன. இவையே, பின்னர் முறையான இஸ்லாமிய வங்கிகள் தோற்றம் பெறக் காரணியாய் அமைந்தன. எனினும், இஸ்லாமிய அடிப்படையில் போதியளவில் முறைப்படுத்தப்படாத இக்கூட்டு முயற்சிகள் தொடர்ந்தும் இயங்கவே செய்கின்றன. அத்துடன் பாரம்பரிய வங்கிகளில் பெருளவு முஸ்லிம்கள் தங்கியிருக்கும் சூழலும் தொடரவே செய்கிறது.

இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில் களத்தில் பல்வேறு இஸ்லாமிய வங்கிகள் தோற்றம் பெற்றன. இவற்றுள் வரவேற்கத் தக்க முன்னோடி, முன்மாதிரி முயற்சிகள் இருப்பது போலவே, பலரை ஏமாற்றும் நடவடிக்கைகளும் இருக்கவே செய்கின்றன.

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு, அதுவரையில் நடைமுறையில் இருந்த 1988 ஆம் ஆண்டைய 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமிய வங்கி முறையை சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொண்ட இந்தத் திருத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த வகையில் 2011 இல் அமானா வங்கி முதலாவது இஸ்லாமிய வங்கியாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. இப்போது பாரம்பரிய வங்கிககள் கூட தனியான அலகுகள் ஊடாக, இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்கி வருகின்றன.

சந்தையில் இஸ்லாமிய நிதி மற்றும் வங்கிச் சேவைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அத்துடன் நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அது தீர்வாகவும் உள்ளது. இஸ்லாமிய வங்கிமுறை நடைமுறைச் சாத்தியமானது என்பது களத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் கோட்பாட்டு அம்சங்கள் குறித்தும், நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் இத்துறையில் ஈடுபட்டிருப்போர் போதிய தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அத்துடன் ஷரீஆவின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையிலேயே தீர்வுகள் பெறப்பட வேண்டும். இந்த நிபந்தனை எப்போதும் மீறப்பட முடியாத ஒன்று.

இஸ்லாமிய வங்கிச் சேவைகளை நடைமுறைப்படுத்தும்போது, நடைமுறையில் உள்ள முறையற்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கமோ தலையீடோ வராத வகையில் நுண்ணறிவுடன் செயற்பட வேண்டிய தேவை அதிகம் உள்ளது. இதை அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இஸ்லாமிய வங்கி முறை பற்றிய போதிய தெளிவின்மை பல நடைமுறைத் தவறுகளுக்கு வழிவகுக்கின்றன. களத்தில் அவ்வாறான குறைபாடுகள் பலவற்றை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், இஸ்லாமிய வங்கியியல் தொடர்பாக எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் நூலொன்றின் தேவை மிகவும் இன்றி யமையாததாக மாறியுள்ளது.

இஸ்லாமிய வங்கிச் சேவைகளில் ஈடுபடுவோரும், இதனை ஒரு துறையாகக் கற்கும் மாணவர்களும், இதில் ஆர்வம் கொண்டுள்ள பொது வாசகர்களும், ‘இஸ்லாமிய வங்கி முறை -ஓர் அறிமுகம்’ என்ற இந்த நூல் மூலம் அதிகம் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இஸ்லாமியப் பொருளாதாரத் துறைக்கான முக்கிய பங்களிப்பு என்ற வகையில், இந்நூலை வெளியிடுவதில் மீள்பார்வை ஊடக மையம் மகிழ்ச்சியடைகிறது.