அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Wednesday, May 30, 2012

க.பொ.த.ப.உ/த பரீட்சை ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை 6ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடைபெற உள்ளது. __

க.பொ.த.ப.உ/த பரீட்சை ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை 6ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Tuesday, May 29, 2012

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

மாணவர்களுக்கு...! 
படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1). நன்றாக கவனித்தல் (Observation)

2). தொடர்பு படுத்துதல் (Correlation)

3). செயல்படுத்தல் (Application)

நன்றாக கவனித்தல்: 
நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. என்ன கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.

தொடர்பு படுத்துதல்:
அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.

செயல்படுத்தல்: 
நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.

கற்றல் செயற்பாங்கு : (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.

குறிப்பு எடுக்க வேண்டும்: 
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.

எவ்வாறு படிப்பது?: 
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.

ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.அதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும்.

ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது.

கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.

இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)

வினா எழுப்புதல்:(Asking Questions)
பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)

வாசித்தல் (Read): 
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.இதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்: 
வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

தேர்வு எழுதிப் பார்த்தல்: 
இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும்.ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

300 வருடங்களாக நிலவும் நியூட்டனின் கணிதப் புதிர் தீர்க்கப்பட்டது

16 வயதேயான ஜேர்மன் இல் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவனான ஷௌர்ய்யா ராய்ஃப்,
300 வருடங்களுக்கு முன் கணித மாமேதையான சர் ஐசாக் நியூட்டனால் விடுவிக்கப் பட்ட கணிதப் புதிரை முதலாவது நபராகத் தீர்த்து சாதனை படைத்துள்ளார். இச்செய்தி இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

வளித்தடை இருந்தபோது நீள்வட்டப் பாதையில் புவியீர்ப்பை எதிர்த்து பயணம் செய்யும் பொருளின் பாதையை எவ்வாறு உறுதியாகக் கணிக்க முடியும் என்பது தொடர்பான கணிதப் புதிரையே இம் மாணவன் தீர்த்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.

இவர் 6 வயதாக இருக்கும் போதே இவரது தந்தையாரும் பொறியியலாளருமான சுஃபாஷிஸ் இவருக்கு கணிதத்தின் மிகக் கடினமான பாகமான நுண்கணிதத்தைப் (Calculus) போதித்துள்ளார். மேலும் இவர் சிறுவனாக இருந்த போதிலிருந்தே கணிதத்தில் அபாரத் திறமை உடையவனாயிருந்துள்ளார்.

இவருக்கு 12 வயதாக இருக்கும் போது இவரின் குடும்பம் ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தது. அங்கு உயர் கல்வி கற்கத் தொடங்கிய ராய்ஃப் தனது தந்தைக்கோ ஆசிரியர்களுக்கோ தெரிவிக்காமலேயே இப் புதிரைத் தீர்த்துள்ளார். இது மட்டுமன்றி 19 ஆம் நூற்றண்டில் எழுப்பப் பட்ட சுவர் ஒன்றின் மீது மோதும் பொருளின் வெடிப்பு பற்றிய இன்னுமொரு புதிரையும் இவர் தீர்த்துள்ளார்.

டைனமிக்ஸ் எனும் இயக்கவியற் துறையில் மைல்கல்லாக விளங்கும் இப்புதிர்களை விடுவித்ததன் மூலம் ஏவுகணைகள் தயாரிப்பில் முன்னேற்றகரமான அடுத்த கட்டங்களை நோக்கி செல்வதற்கு இவர் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, May 26, 2012

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவான மாணவர் கவனத்திற்கு...!

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சு நாளை ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி நடாத்தவிருந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை உயர் கல்வியமைச்சு விடுத்துள்ளது.

ஏ.எல்.பரீட்சை மீள்திருத்த புள்ளிகள் தாமதம், வெட்டுப்புள்ளி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டே இந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவ பயற்சி மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவான மாணவர் கவனத்திற்கு...!

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சு நாளை ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி நடாத்தவிருந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thursday, May 24, 2012

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பொறியியல் பீடம்!

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஞ்ஞான பீடத்தில் கணணி, புள்ளிவிபரவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், உயர் கல்விக்காக நாட்டம் கொண்டவர்களின் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக MBA கற்கை நெறியை ஆரம்பித்து மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருவதாகவும்தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இப்பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்கு குவைத் அரசாங்கம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீயுள்ளதுடன் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதத்கது.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பொறியியல் பீடம்!

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Sunday, May 20, 2012

இலங்கை முஸ்லிம் மாணவி சர்வதேச ரீதியாக சாதனை

தெஹிவளையைச் சேர்ந்த செல்வி பாத்திமா நுஸ்லா கப்பார் பிஸ்னஸ் எக்ஸ்கவிடிவ் அசோசியசினால் நடாத்தப்பட்ட சர்வதேச பரிட்சையில் இஸ்லாமிய நிதி மற்றும் இஸ்லாமிய பொருளாதார பாடத்தில் முதலாமிடத்தைப் பெற்று சர்வதேச பரீசினைப் பெற்றுள்ளார்.

தெஹிவளை ஐ.பி.எல். வளாகத்தில் பயிலும் இவர் 2012ம் ஆண்டு இஸ்லாமிய நிதித்துறையில் பட்டம் பின் பரீட்சைக்குத் தோற்றுகிறார்.

இல்மா சர்வதேச பாடசாலையின் பழைய மாணவியான இவர் அக்கல்லூரியில் சிரேஷ்ட மாணவத் தலைவியாகவும் பணிபுரிந்தார். இவர் தெஹிவளை பொறியியலாளர் அல்ஹாஜ் கப்பார் ரவூப் காலஞ்சென்ற ஹாஜியானி சித்தி வஸிரா தம்பதியினரின் புதல்வியாவார்.

இலங்கை முஸ்லிம் மாணவி சர்வதேச ரீதியாக சாதனை

தெஹிவளையைச் சேர்ந்த செல்வி பாத்திமா நுஸ்லா கப்பார் பிஸ்னஸ் எக்ஸ்கவிடிவ் அசோசியசினால் நடாத்தப்பட்ட சர்வதேச பரிட்சையில் இஸ்லாமிய நிதி மற்றும் இஸ்லாமிய பொருளாதார பாடத்தில் முதலாமிடத்தைப் பெற்று சர்வதேச பரீசினைப் பெற்றுள்ளார்.

காத்தான்குடி பிரதேச கல்விஉயர் சபை - KEC

காத்தான்குடி பிரதேச கல்வியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு திட்ட மிட்டு வழி நடாத்துவதற்காக கல்வித்துறை சார்ந்தவர்களைக் கொண்ட உயர் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு (19.05.2012) சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் நடைபெற்றது.

சுதந்திரமாகச் செயற்படும் இச்சபையின் உறுப்பினர்களையும், பணிகளையும் அறிமுகப்படுத்தி, அனைவரது ஒத்துழைப்பையும் பெரும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார, காணி,காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமல வீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மாகாணக் கல்விஅமைச்சின் பதில் செயலாளர் அல்ஹாஜ்.எம்.டீ.எம். நிசாம், வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். யு.எல்.எம். ஜெயினுதீன், பிரதேச கல்விப் பணிப்பாளர்சுபைர், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பிராந்திய காரியாலய செயலாளர் பீ.ரீ.எம். பாறூக் மற்றும் பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரிய, ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சுதந்திரமாகச் செயற்படும் இச்சபையின் உறுப்பினர்களையும், பணிகளையும் கிழக்கு மாகாண கல்வி,கலாச்சார, காணி,காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமல வீர திஸாநாயக்க, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இக் கல்விச் சபையின் தலைவராக காத்தான்குடியின் முன்னாள் கல்வி அதிகாரி எம்.ஐ.சின்னலெவ்வை, செயலாளராக முன்னாள் அதிபர் எம்.எச்.ஏ.இஸ்மாயில், சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், மௌலவி அலியார் றியாதி, எம்.ஐ.எம்.நவாஸ். காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எம்.எம்.சுபைர், டாக்டர் எம்.டி.எம்.மாஹிர் உட்பட 10பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதேச கல்விஉயர் சபை - KEC

காத்தான்குடி பிரதேச கல்வியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு திட்ட மிட்டு வழி நடாத்துவதற்காக கல்வித்துறை சார்ந்தவர்களைக் கொண்ட உயர் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Saturday, May 19, 2012

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (படத்துடன் முழு விபரங்கள் இணைப்பு)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை  8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மத் பட்டங்களை வழங்கி வைத்தார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த ஆறு பட்டமளிப்பு விழாக்களும் கொழும்பு நகரத்திலேயே நடத்தப்பட்டன. தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்கள்  மேற்கொண்ட அயராத முயற்ச்சி காரணமாக இம்முறை பட்டமளிப்பு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக பல்கலை கழக  ஒலுவில் வளாகத்திலேயே இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.

பிரயோக விஞ்ஞான பிரிவில் 58 மாணவர்களும் , கலை கலாச்சார பிரிவில் 237 மாணவர்களும் , இஸ்லாமிய கற்கை பிரிவில் 70 மாணவர்களும் , வர்த்தக முகாமைத்துவ  பிரிவிலிருந்து 59 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.

வைபவத்தில் உயர் கல்வி அமைச்சர் எஸ்திசாநாயக்க பிரதம அதிதியாகக்.பி. கலந்து சிறப்பித்தார். சிறப்புப் பேச்சாளராக கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜயந்த நவரத்ன கலந்து சிறப்புரை ஆற்றினார்.

இன்றைய நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலை கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.எ.கதருக்கு கௌரவ இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விஞ்ஞான பிரிவில் 2006/2007 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர் ( Best  Student) கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ராப் நினைவுப்பதக்கம் சாகுல்ஹமீது சாஜிதா என்ற மாணவிக்கும், இரசாயன பிரிவில் 2005/2006 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர்  ( Best  Student) பேராசிரியர் சுல்தான் பாவா நினைவுப்பதக்கம் செயனுலாப்டீன் பாத்திமா பதானா என்ற மாணவிக்கும், இஸ்லாமிய கற்கை பிரிவில் 2005/2006 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர்  ( Best  Student) எம்.எச்.அப்துல்காதர் நினைவுப்பதக்கம் அப்துல்ரஹீம் பாத்திமா சஹீகா பார்வின் என்ற மாணவிக்கும், முகாமைத்துவ  பிரிவிலிருந்து (Best in Management) 2005/2006 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர் அல்ஹாஜ் எ.எல்.இப்ராலேப்பே நினைவுப்பதக்கம் அபுபாக்கர் இல்முடீன் என்ற மாணவருக்கும், அல்ஹாஜ் எ.எம்.இஸ்மாயில் நினைவுப்பதக்கம் (Best in Commerce) மவ்ஜூத் மொஹம்மத் சிராஜ் என்ற மாணவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பிற்பகல் 4.30 தொடக்கம் 8.30 வரைக்கும் தென்கிழக்கு பல்கலை கழகத்தில் 2000ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரைக்கும் விளையாட்டுத்துறையில் அக்கரை செலுத்தியவர்கள் மற்றும் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றுக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் வர்ண இரவு (கலர் நைட்) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு 151 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அதே வேளை நாளை (2012.05.20)வெளிவாரி மாணவர்கள் 270 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது இதில் பிரதம அதிதியாக பிரதி உயர் கல்வி அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க கலந்து கொள்ளவுள்ளார் சிறப்பு பேச்சாளராக நெதர்லாந்தை சேர்ந்த கிளிஞ்சன்டெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்ஜ் பிரஜ் கலந்து கொள்ளவுள்ளார். .
thanks toயாழ் முஸ்லிம்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (படத்துடன் முழு விபரங்கள் இணைப்பு)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை  8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மத் பட்டங்களை வழங்கி வைத்தார்.

Friday, May 18, 2012

உயர் கல்விக்காக பாடசாலைகளை மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட சுற்றறிக்கை வாபஸ்!

க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் உயர்சித்தி அடைந்த மாணவர்கள், தேசிய பாடசாலை ஒன்றிலிருந்து, மற்றுமொருதேசிய பாடசாலைக்கு உயர் கல்விக்காக சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கை தற்காகலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களும் பெற்றோர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியமையால் தற்காகில்கமாக இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கல்விகளின் பிரபல்யம், தரம் என்பவற்றை கருத்தில் கொண்டு, கல்வி பொது தராதர உயர் தர கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களை பெற்றோர் இடம்மாற்றுவது வழக்கம்.

எனினும் ஒரு தேசிய பாடசாலையிலிருந்து மற்றுமொரு தேசிய பாடசாலைக்கு இவர்களை மாற்றுவது உகந்ததல்ல என கூறியுள்ள பிரதி அமைச்சர், அதிக பெறுபேறுகளை பெற்ற்க்கொள்ளும் மாணவர்களை தமது பாடசாலைகளில் உயர் தரத்திற்காக இணைத்து கொள்ள அதிபர்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் கல்விக்காக பாடசாலைகளை மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட சுற்றறிக்கை வாபஸ்!

க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் உயர்சித்தி அடைந்த மாணவர்கள், தேசிய பாடசாலை ஒன்றிலிருந்து, மற்றுமொருதேசிய பாடசாலைக்கு உயர் கல்விக்காக சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கை தற்காகலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, May 16, 2012

Islamic Development Bank (IDB) Scholarship Programme for Muslims

Communities in Non-Member Countries (SPMC)
Last date for Application is Tuesday 31 July 2012. So hurry! Your dreams are waiting for you.
Islamic Development Bank, Jeddah, Kingdom of Saudi Arabia, introduced its scholarship program in many countries including India in the year of 1983 with a view to promote professional education among Muslim community. This emerged as the main source of our program.

தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தகவல்: அப்துல்லாஹ் -
தேசிய பயிலுனர்க் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் கட்டுநாயக்க எந்திர தொழிநுட்பவியல் நிறுவகத்தில் நடாத்தப்படும் தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Monday, May 14, 2012

தேசிய பாடசாலையில் இருந்து இன்னொரு தேசிய பாடசாலைக்கு க.பொ.த உயர்தரத்தின் பின் இடம்மாறமுடியாது; கல்வி அமைச்சர்

தேசிய பாடசாலைகளுக்கிடையே க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் இடம்மாறிச் செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இனிவருங்காலங்களில் க. பொ. த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த தேசிய பாடசாலை மாணவரொருவர் தான் க.பொ.த. உயர்தரத்தில் தொடர வேண்டிய துறை, மொழி மூலம் மற்றும் ஏனைய வசதிகள் இருப்பினும் எக்காரணம் கொண்டும் அவர் தனது பாடசாலையினை விட்டு இன்னொரு தேசிய பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட இயலாதெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்தரத்தை தொடர்வதற்கு சகல வசதிகளுடனும் கூடிய தேசிய பாடசாலையொன்றிலிருந்து இன்னுமொரு தேசிய பாடசாலைக்கு மாணவர்களை இடம்மாற்றிக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென என்னால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. 

இதனையடுத்து இது தொடர்பான விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தடை விதிகளை மீறி மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய பாடசாலை அதிபருக்கெதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அனைத்து பாடசாலைகளிலும் க. பொ. த. உயர்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பெற்றோரின் அளவுக்கதிகமான ஆர்வம் காரணமாக பிரபலமான பாடசாலைகளிலுள்ள மாணவர்களை இன்னுமொரு பிரபலமான பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் சட்டவிரோதமான குளறுபடிகள் பல உண்டாக இடமுண்டு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலையில் இருந்து இன்னொரு தேசிய பாடசாலைக்கு க.பொ.த உயர்தரத்தின் பின் இடம்மாறமுடியாது; கல்வி அமைச்சர்

தேசிய பாடசாலைகளுக்கிடையே க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் இடம்மாறிச் செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Sunday, May 13, 2012

O/L மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட திட்டம்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை தெளிவூட்டும் வகையில் சுற்றுநிரூபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில், இந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயது பூர்த்தியாகும் அனைவரும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது பிறந்த மாதத்திற்கு அமைவாக வெவ்வேறான கோவைகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பங்களை உறுதிப்படுத்தி உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயது பூர்த்தியாகாத பரீட்சார்த்திகளுக்கு தபால் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுள்ளது 

இதுதொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருப்பின் 0112 583 122 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

O/L மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட திட்டம்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு !

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் தொழிற்படுகின்றவர்த்தக திணைக்களத்திற்கு உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்கு
ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2012

விண்ணப்ப முடிவுத் திகதி.-2012.06.01
விபரம்:மேஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில்

இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை

இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை
(இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு)
தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேரப் பயிற்சி நெறிக்கான
அனுமதி - 2012

கீழ்க்காணும் ஆகக்குறைந்த தகைமைகளையுடைய ஆண்ஃ பெண் இருபாலாரிடமிருந்து 2012 ஆம் ஆண்டு அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன 
விண்ணப்ப முடிவுத் திகதி.- 2012.06.20

விபரம்:மே4 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில். 

இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை

இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை
(இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு)
தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேரப் பயிற்சி நெறிக்கான
அனுமதி - 2012

ஆங்கிலம் கற்பிக்க 1000 வெற்றிடம் இருந்தபோதும் 280 பேரே விண்ணப் பித்துள்ளனர்

அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும் . கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன  
நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு 3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் இருந்தபோதும் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நாட்டில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கிலபாடத்தை பட்டமாக கற்றவர்கள் இல்லை ஆகவேதான் அடுத்த அமைச்சரவையின் கூட்டத்தின்போது ஆங்கில மொழி முலமாவது பயின்ற பட்டதாரிகளை ஆங்கிலம் கற்பிப்பதற்குச் சேர்த்துக் கொள்வதற்காக மீள விண்ணப்பம் கோரப்படுவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும. என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

ஆங்கிலம் கற்பிக்க 1000 வெற்றிடம் இருந்தபோதும் 280 பேரே விண்ணப் பித்துள்ளனர்

அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும் . கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன  
நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு 3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் இருந்தபோதும் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர்.

Friday, May 11, 2012

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள்சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர்.

இப்பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப் பட்டிருக்கும் மாணவர்கள் மே மாதம் 27 ஆம் திகதி மாலை 6.00 மணிக் குள் தங்களது பயிற்சி நிலையங்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள்சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர்.

ஆங்கிலத்தில் ஈமெயில் வாசிக்க இனிமேல் ஆங்கில அறிவு தேவையில்லை:

ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.

ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் ஈமெயில் வாசிக்க இனிமேல் ஆங்கில அறிவு தேவையில்லை:

ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.

Wednesday, May 9, 2012

இம்மாத இறுதிக்குள் 1000 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

இம்மாத இறுதிக்குள் 1000 தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பாடசாலைகளிலேயே கடமையாற்ற வேண்டும் என்றும் இல்லையேல் நியமனங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்பப் பட்டதாரிகள் கடமையாற்ற வேண்டிய பாடசாலையைக் கல்வியமைச்சே முழுமையா கத் தீர்மானிக்கிறதே தவிர இதில் பட்டதாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம் வழங்கப்பட வில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

1000 தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் ஆசிரியர் நியமனம் வழங்குவது இதுவே முதற் தடவையாகு மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்மாத இறுதிக்குள் 1000 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

இம்மாத இறுதிக்குள் 1000 தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Tuesday, May 8, 2012

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

முதலில், கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கி, nhm writer என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்:
http://software.nhm.in/products/writer 
அதன்பின், உங்கள் கணினியில் அந்த மென்பொருளை நிறுவுங்கள். நிறுவும்பொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுங்கள்.

Sunday, May 6, 2012

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.

இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர். 

இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார். 

உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார். 

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது. 

அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது. 

இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்! 

ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன. 

ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன. 

இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.

ஜாமிஆ நளீமிய்யாவுக்கு 2012/2013 கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் விபரம்

Jamia Naleemia - ஜமிஹா நலீமி��.. 
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2012/2013 கல்வியாண்டிற்காக புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பின்வருவோர் சித்தியடைந்து நளீமியாவில் புதிதாக கல்வியைத் தொடர சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி தெரிவித்தார்.

Saturday, May 5, 2012

உங்கள் கையெழுத்தையே ஒரு Font ஆக மாற்றி நண்பர்களை வியப்பில் ஆழ்த்த.

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்?  அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும்.

கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.

சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.

கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.