(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கிலங்கையின் மூத்த கல்விமான்களுள் ஒருவரும் மார்க்க அறிஞரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான மருதமுனை சமூக ஜோதி அல்ஹாஜ் அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பளீல் மௌலானா (வயது-92) அவர்கள் இன்று திங்கட்கிழமை சுபஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நிலையில் வபாத்தானார்.
இவர் யெமன் தேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட- அஹ்லுல் பைத் எனும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாரிசைச் சேர்ந்தவரான கலீபத்துஷ் ஷாதிலி அஷ்ஷெய்யித் அஷ்ஷெய்க் மௌலவி ஐதுருஸ் மௌலானா அவர்களின் புதல்வர்களுள் ஒருவராவார்.
அத்துடன் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகர் சட்டத்தரணி அமீருல் அன்ஸார் மௌலானா, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மௌலானா, கல்முனை பற்றிமா கல்லூரி ஆங்கில ஆசிரியர் ஜின்னா மௌலானா ஆகியோரினதும் நான்கு பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் செனட்டர் மசூர் மௌலானா, மர்ஹூம் கலைச்சுடர் சக்காப் மௌலானா ஆகியோரின் சிறிய தந்தையுமாவார்.
அனுராதபுரம், பொலன்னறுவ, கேகாலை, புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அல்ஹாஜ் பளீல் மௌலானா அவர்கள், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி, சம்ஸ் மத்திய கல்லூரி ஆகியவற்றின் அதிபராகவும் கல்முனை வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
அரச சேவை ஓய்வுக்குப் பின்னர் அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரி, அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் அரபுக் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகப் பணிப்பாளராகவும் 14 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளராகவும் அதன் கட்டிட நிர்மாணக் குழு உறுப்பினராகவும் இருந்து பெரும் பணியாற்றியுள்ளார். ஆத்மீக எழுத்தாளரான இவர் இஸ்லாம் மார்க்கம் தொடர்பிலான சில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
அன்னாரது ஜனாஸா இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை அபுல்கலாம் பளீல் மௌலானா அவர்களின் மறைவு குறித்து அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.பௌசி, பஷீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், ஹசன் அலி, பைசால் காசிம் உட்பட மற்றும் பலரும் பொது அமைப்பினரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.