அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, February 22, 2013

மாணவர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக மாற்றுவதற்கு...


சர்வதேச பாடசாலைகளின் பங்களிப்பு அவசியம்!.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையில் சர்வ தேச பாடசாலையொன்று முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது ஆங்கிலக்கல்வியில் ஆர்வம் கொண்ட நம்நாட்டு மக் கள் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சர்வதேச பாடசா லையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட்டால் லண்டன் க. பொ.த. சாதாரணதர, உயர்தர பரீட்சைகளை எமது பிள்ளைகள் இலங்கையில் இருந்தே எழுதி லண்டன் பல்கலைக்கழகங்களு க்கு அனுமதி பெறும் வாய்ப்பு கிட்டுமென்று பெற்றோர் மகிழ்ச்சி யில் ஆழ்ந்தார்கள்.

விடலைப் பருவத்தில் லண்டன் போன்ற நகரங்களுக்கு தங்கள் ஆண், பெண் பிள்ளைகளை தனியாக அனுப்பி சாதாரணதர, உயர்தர பரீட்சைக்கு தயார்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள முடி யுமென்றும் லண்டன் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பின் னர் லண்டனுக்கு அனுப்பி பட்டதாரிகளாக்க முடியும் என்று பெற் றோர் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

அதன்படி முதலாவது சர்தேச பாடசாலையில் கல்வி கற்ற மாணவர் கள் பலர் இன்று முதுமாணி, கலாநிதி பட்டங்களை வெளிநாடுக ளில் பெற்று அங்கு உயர்பதவிகளை வகித்துவருவது குறிப்பிடத் தக்க விடயமாகும்.

ஆரம்பகாலத்தில் ஒரு சர்வதேச பாடசாலை மாத்திரமே இலங்கை யில் இருந்தது. இத்தகைய சர்வதேச பாடசாலைகளை ஆரம்பித் தால் மூடை, மூடையாக பணம் சம்பாதிக்க முடியுமென்ற ஆசை யில் பலரும் சர்வதேச பாடசாலைகளை நாட்டில் ஆரம்பித்தார் கள். இவ்விதம் அவசர, அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பாடசாலைகளுக்கு நல்ல கற்றறிந்த ஆங்கில ஆசிரியர்கள் கூட இருக்கவில்லை. அதனால், சர்வதேச பாடசாலைகளின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்தது.

நாடெங்கிலும் காளான்களைப் போன்று இன்று சர்வதேச பாடசாலை கள் தோன்றி வருகின்றன. தற்போது சுமார் 300இற்கும் மேற்ப ட்ட சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சர்வதேச பாடசாலைகள் இன்று அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், ஒரு புதிய கல்விக் கலாசாரத்தை உருவாக்கி நம்நாட்டு பிள்ளைகளின் எதிர்கால கல் விக்கு எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பை வழங்காமல் இருப் பது வேதனையை அளிக்கிறது.

சர்வதேச பாடசாலைகள் இன்று நம்நாட்டு பிள்ளைகளுக்கு எமது வர லாற்றைக் கற்பிக்கும் பாடங்களையும், தாய்மொழியையும் கற்பிப் பதில் அக்கறை இல்லாமல் செயற்படுவது பற்றிய தகவல்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காதுகளுக்கும் எட்டி யிருக்கிறது. இதனால் சற்று வேதனையடைந்த ஜனாதிபதி அவர் கள், சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழியையும் எங்கள் நாட் டின் வரலாறு பற்றிய பாடங்களையும் கற்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

எமது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளில் கற்றுக் கொண்டாலும், எங்கள் நாட்டின் கலை, கலாசாரத்தை நன்கு அறிந்து கொண்டி ருந்தால்தான் அவர்களை எதிர்காலத்தில் நாட்டுக்காக பாடுபடும் நல்ல தேசப்பற்றுடைய பிரஜைகளாக மாற முடியும். அந்தப் பணியை இன்று சர்வதேச பாடசாலைகள் செய்யத்தவறிவிட்டன.

சர்வதேச பாடசாலைகளில் கற்றுக் கொள்ளும் பிள்ளைகள் மேற்கத் திய நாகரிகத்தில் முற்றாக மூழ்கி, தங்கள் பெற்றோருடன் கூட வீடுகளில் தாய்மொழியில் பேசுவதற்கு பதில் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தாய்மொழியை இந்த மாணவர்கள் தெரிந்து வைத் திருந்தால் கூட தாய்மொழியில் பேசுவது அவர்களுடைய அந்த ஸ்தை குறைத்துவிடும் என்ற போலி கெளரவத்தைக் கொண்டுள் ளார்கள்.

சர்வதேச பாடசாலைகளில் மாணவ, மாணவிகள் ஒரே வகுப்பில் கல்வி கற்றுக்கொள்கிறார்கள். இது போன்ற கலவன் பாடசாலை கள் கல்வித்திணைக்களத்தின் கீழ் இயங்குகின்றன. அங்கு பாட சாலை முடிவடைந்தவுடன் பிள்ளைகள் நேராக வீடு திரும்பிவிடு வார்கள். ஆனால், சர்வதேச பாடசாலைகளில் மாணவ, மாணவி யர் பாடசாலை முடிவடைந்த பின்னரும் நெருக்கமாக பழகுவத ற்கு பெருமளவு சுதந்திரம் இருக்கின்றது. இதனால், சர்வதேச பாடசாலை பிள்ளைகளின் ஒழுக்கம் சீர்குலைந்து போவதாக அப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர் வேத னைப்படுகிறார்கள்.

சர்தேச பாடசாலைகள் பெற்றோரிடமிருந்து பணத்தைக் கறக்கும் அமை ப்புகளாக செயற்படுகின்றன. இதனால், பாடசாலைக்கு மாதாந்தம் செலுத்தும் கட்டணத்தைவிட மாதமொன்றுக்கு பாடசாலையின் பல்வேறு நிகழ்வுக்காக 5000 முதல் 10,000ரூபா வரை செலவிட வேண்டிய வேதனைக்குரிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பண த்தை செலுத்தாவிட்டால் பிள்ளைகளின் மனம் நொந்துவிடும் என்ற அச்சத்தினால் பெற்றோர் இவ்விதம் பணத்தை அநாவசிய மாக செலவிடுகிறார்கள்.

அரசாங்கப் பாடசாலைகளில் பெளத்தம், ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற போதி லும் சர்வதேச பாடசாலைகள் இது விடயத்தில் அந்தளவுக்கு முக் கியத்துவம் அளிப்பதில்லை. சர்வதேச பாடசாலைகள் கலர் என்ற கெளரவிப்பு வழங்கும் மாலைப்பொழுது நிகழ்ச்சிகள் போன்ற கல்வியுடன் தொடர்பற்ற நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளி த்து அவற்றின் மூலமும் பெற்றேரிடம் இருந்து மேலதிகமாக பணத்தை அறவிடுகின்றன.

இனிமேலாவது ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச பாடசாலைகள் ஆங்கில பாடங்களை கற்றுக் கொடுக் கும் அதே வேளையில், அங்கு கல்வி கற்கும் பிள்ளைகளை நல் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வைப்பதிலும் அதிக கவனம் செலு த்த வேண்டும். பிள்ளைகளை நாட்டுப்பற்றுள்ளவர்களாக வளர்க்க வேண் டுமாயின், சர்வதேச பாடசாலைகள் தய்மொழியையும், நாட்டின் வர லாற்று பாடங்களையும் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்.

thinakaran