இயந்திர உலகத்தில் அதிகரித்துவரும் கரியமில வாயுவின் (CARBON DIOXIDE) அளவை குறைக்கவும் மற்றும் பூமி வெப்பமடைதலை குறைக்கவும் செயற்கையாக லேசர் (ஒளிக்கற்றை) முறையில் சீரமைக்கும் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
PANASONIC நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முறை மூலம் மேற்கொள்ளப்படும் லேசர் செயற்பாட்டின் போது காற்றில் கலந்துள்ள கரியமில வாயு உள்ளெடுக்கப்படுவது மட்டுமல்லாது அதன் விளைவாக ஆக்ஸிஜன் வாயு மற்றும் எதனோல் போன்றவை வெளியாகிறது.
இதனால் சுற்று சூழலில் உள்ள கரியமில வாயுவின் அளவு குறைக்கப்படுவதுடன் பூமி வெப்பமடையும் வீகிதத்தை குறைக்க முடியும் எனவும் பானாசொனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.