மத்திய மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் 1700 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய மாகாணக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய மாகாணத்திலுள்ள கண்டி , மாத்தளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள இந்த ஆசிரியர் வெற்றிடங்களில் ஆங்கில பாடத்திற்காக 299 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களில் சிங்களமொழி மூல பாடசாலைகளில்157 வெற்றிடங்களும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 142 வெற்றிடங்களும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆங்கில பாட வெற்றிடங்களைத் தவிர கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் மற்றும் நடனம், சங்கீதம், சித்திரம் போன்ற அழகியற் பாடங்களுக்குமாக 638 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அத்துடன் தகவல் தொழினுட்பம், வர்த்தகவியல் பாடங்களுக்காக ஏனைய வெற்றிடங்களும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ கல்வி வலயத்திலும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை கல்வி வலயத்திலும் ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய மாகாண கல்வியமைச்சு பட்டதாரிகளிடமிருந்து பாடரீதியாக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
பட்டதாரிகள் மூலமாக வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்கள் நியமனம் பெற்ற திகதியிலிருந்து குறிப்பிட்ட பாடசாலையில் தொடர்ச்சியாக பத்து வருடம் சேவையாற்ற வேண்டியது கட்டாயமெனவும் மத்திய மாகாணக்கல்வியமைச்சு அறிவித்துள்ளது.