யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்தப் பயிற்சிக்காக முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் 14 பயிற்சி நிலையங்களில் 10 மாதங்களவரையில் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
இதற்காக 16.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு திருகோணமலை டைக் வீதியிலுள்ள ரொட்டறிக்கழக இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ரொட்டறிக்கழக ஆளுநர் தர்ஷன் ஜோன், ஐக்கிய அமெரிக்கா களுபோர்ணியா ஆளுநர் பிராங்க் கோர்ட்டஸ், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ந.விஜேந்திரன் மற்றும் திருகோணமலை ரொட்டறிக்கழக பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.