பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் இம்மாதம் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன இணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
பெப்ரவரி 28ம் திகதிவரை இடம்பெறவுள்ள மூன்றாம் கட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்க 7038 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சி வழங்க நாடு முழுவதும் 28 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்களை இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு, நான்காம் கட்ட பயிற்சி நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.