
இதில் அம்பாறை மாவட்ட காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் தரம் 6 இல் கல்விகற்கம் மாணவி சகாதேவராஜா டிவானுஜா முதல் 85 புள்ளிகளைப் பெற்ற முதல் மாணவியாக மாகாண மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தாக 24 மாணவர்கள் உள்ளனர்.
தரம் 7, 8, 9 வகுப்புகளைக் கொண்ட இரண்டாம் தொகுதியில் ஏறாவூரைச் சேர்ந்த மாணவி எம்.எ.எம்.நுஸ்றி 90 புள்ளிகளையும், தரம் 10, 11 பிரிவில் திருகோணமலையைச் சேர்ந்த மாணவன் எ.அவ்ஹம் 95 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவருக்கு அடுத்தாக 50 மாணவர்கள் உள்ளனர்.
குறிப்பிட்ட மூன்று மாணவர்களும் கிழக்கு மாகாணத்தில் முதல்நிலை மாணவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தேசியமட்டப் பரீட்சை இம்மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
