அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Tuesday, February 19, 2013

சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும்!

கல்வியமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

நாட்டில் இயங்கும் சகல தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளும் கல்வி அமைச்சின் நியமனங்கள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு கீழ் கொண்டுவரப்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கிணங்க சட்டங்களை வகுத்துச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி நேற்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இங்கு வெவ்வேறு நாடுகள் கிடையாது. நாட்டில் அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என்ற பேதங்களுக்கு இடமில்லை. சகல பாடசாலைகளும் கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்குக் கட்டுப்பட்டே இயங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் இது தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் தாய்மொழி, சமயம், மற்றும் வரலாறு கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டுமெனவும் சர்வதேச பாடசாலையில் கல்வி கற் றாலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தாய்மொழியும் நாட்டின் வரலாறும் சமய நல்வழிமுறைகளும் தெரிந்திருப்பது மிக முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று ஒழுக்கமும் வினைத்திறனும் சகல கல்விக் கூடங்களினதும் மாணவர்களுக்கு மிக மிக அவசியமானது என்பதைக் கருத்திற்கொண்டு பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பாகத் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஒழுக்கத்துக்கு முக்கியத்துவமளித்து தாய்மொழி மற்றும் எமது வரலாறு ஆகியவற்றில் எமது எதிர்கால சந்ததியினர் தேர்ச்சியுள்ளவர்களாகத் திகழ்வது அவசியம் எனவும் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் பல மாணவர்களுக்குத் தாய்மொழி தெரியாது. இந்த மோசமான நிலை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சுக்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அமைச்சுக்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து குறைநிறைகளை நிவர்த்தி செய்யும் செயற்திட்டமொன்று ஜனாதிபதியின் தலைமையில் சகல அமைச்சுக்கள் ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதல் செயற்திட்டமாக கல்வியமைச்சின் மீளாய்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பந்துல குணவர்தன, பசில் ராஜபக்ஷ, துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர, பரீட்சைகள் ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகள் மக்கள் மத்தியிலிருந்து வெளிப்படும் முறைப்பாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர் பற்றாக்குறை, அதிபர், ஆசிரியர்களின் செயற்பாடுகள், முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் எதிர்நோக்க நேரும் நெருக்கடிகள் சர்வதேச பாடசாலைகளின் நிலைமைகள், மாணவர்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

இவற்றில் சிலவற்றுக்கு உடனடித் தீர்வும் வழிகாட்டல்களும் ஏனையவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி :-எமது கல்வி முறையில் மாற்றம் அவசியம். எமது நாட்டுக்குப் பொருத்தமானதாகவும் சர்வதேச தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்றதாகவும் கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.பாடசாலைகள், பல நூறு வருடம், நூற்றி இருபத்தைந்து வருடம் பழைமை வாய்ந்த கட்டடங்களைக் கொண்டுள்ளன.

இதனைப் புனரமைப்பதற்கோ அல்லது மீள் நிர்மாணம் செய்வதற்கோ பெருமளவு நிதி தேவைப்படுகிறது என்பதைக் கல்வியமைச்சர் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய செலவினங்களுக்காக 2008 ஆம் ஆண்டு 13 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கடந்த சில வருடங்களாக நான்கு பில்லியன் ரூபாவே இதற்காக ஒதுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். 2008ல் ஒதுக்கிய தொகையை என்றாலும் தொடர்ந்து இதற்கென ஒதுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, சில பாடசாலைகளில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் செயற்பாடுகளை நிறைவுசெய்ய வேண்டியுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மண் சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்துள்ள பாடசாலைக் கட்டடங்களை மீள்நிர்மாணம் செய்வது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க :-ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான நெருக்கம் தற்போதைய கல்வி கற்பித்தலில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் நலன்கள் தொடர்பில் குறிப்பிட்டார். வகுப்பில் கற்பித்தல் முறையாக நடக்கின்றதா? அல்லது அரசாங்கம் பெரும் பணச் செலவில் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துகின்ற போதும் கற்பிப்பு வெறும் கடமைக்கானதாக மற்றும் இடம்பெறுகிறதா என்பவற்றை கண்காணிப்புச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைத்தார்.

சில மாணவர்கள் ஐந்தாம் வகுப்பில் கற்பிக்கின்ற போதும் ஒரு வாக்கியத்தைச்சரியாக எழுதத் தெரியாத நிலையில் உள்ளனர். 2013ல் இதனைச் சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

ஆசிரிய ஆலோசகர்களின் சேவை குறித்தும் அவர்களின் சேவை முக்கியமானது. எனினும் அவர்களுக்கு மேலதிகமாகக் கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் அதிகாரிகளால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது ஆசிரிய ஆலோசகர்களாக திறமையான இளம் பட்டதாரிகளும் நியமிக்கப்படலாம். அவர்கள் இக்கால கற்பித்தலை அதிகமாகத் தெரிந்து கொள்வார்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவது தொடர்பில் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பவங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மாணவியிடம் 800 ரூபா பணம் கோரப்பட்டது என்பது சோடிக்கப்பட்ட கதை ஒன்று எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.சம்பந்தப்பட்ட சம்பவத்தில் பொலிசாரால் எதனையும் செய்ய முடியாத நிலையில் கட்டாயம் அந்த விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல வேண்டும் என்ற அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, ஆசிரியர்களின் பிரச்சினைகள் பாடசாலையிலேயே தீர்க்கப்பட வேண்டும். அவை நீதிமன்றம் வரை செல்லக்கூடாது. அது பாடசாலை, மாணவர் மற்றும் கல்வி நடவடிக்கையை பாதிப்பதோடு வழக்குப் பேசுவதற்கு அநாவசியமாக பணத்தையும் செல விட நேரும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பரீட்சைகளில் இடம்பெறும் தவறுகள் இனிமேல் நடக்காதவாறு மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அதேவேளை குறித்த காலத்தில் முடிவுகள் வெளியிடப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.இதனை வைத்து எதிர்க் கட்சிகள் அரசியல் செய்ய முயல்கின்றனர்.

அவர்களில் தவறான பிரசாரங்களை செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நினைப்பில் செயற்படும் வெற்றிபெற முடியாத எதிர்க்கட்சியினர் இருக்கும் வரை இத்தகைய நடவடிக்கைகள் நீடிக்கும்.

இதனைக் கருத்திற்கொண்டு எந்தக் குறையுமில்லாமல் பரீட்சைகள் இடம்பெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தினார்.