விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களை உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்வி அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன இணைந்து உரிய செயற்றிட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டார்.

பாடசாலையின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர், அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அமைச்சுக்களை தொடர்புபடுத்தும் வகையிலான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி இன்று காலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.