மாணவர்களுக்கு உகந்த வகையில் நம்பகத்தன்மையுடன் கூடியதாக வினாத்தாள்களை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வினாத்தாள்களில் ஏற்படும் குறைபாடுகள் தொடர்பாக, அகில விராஜ் காரியவசம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, பரீட்சைத் திணைக் களத்தினூடாக எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
வினாத்தாள்கள் மாணவர்களுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்படவேண்டும்.அதற்காக விசேட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களின் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்கமைய பரீட்சை முறையில் மாற்றம் செய்யப்படும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பரீட்சைத் திணைக்களம் வினாத்தாள்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.