தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபடுகின்ற காலப் பகுதிக்குள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு ஒருசில மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி திடடத்தின் நான்காம் கட்டம் அடுத்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் மூவாயிரத்து 600 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், திருகோணமலை, மாதுரஓயா, மின்னேரிய, தியதலாவ, எம்பிலிப்பிட்டி, பூஸா, தொம்பகொடை மற்றும் ரன்டம்பே ஆகிய பயிற்சி முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.