
இலங்கை கண்தாண சங்கத்தினால் கண்பார்வையற்றவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அதிகாரிகளாக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வு இன்று (22.02.2013) வெள்ளிக்கிழமை காலை அலரி மாளிகையில் அருகில் உள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டு பார்வையற்றவர்களுக்கான விருதுகளை வழங்கி வைத்தார்.
ராஜகிரியையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கண் தான சங்கத்தின் கட்டிடத்தினை பூர்த்திசெய்வதற்குத் தேவையான நிதியினை தான் வழங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதியளித்தார்.





