தகவல் – முகம்மட் நிஸர் ஆசிரியர் -
சென்ற வாரம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் சிறப்பான முறையில் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் இருந்து 05 மாணவிகளும், கலை பிரிவில் இருந்து 14 மாணவிகளும், வர்த்தகப் பிரிவில் இருந்து 02 மாணவிகளுமாக 21 இற்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.
இப்பாடசாலையிலிருந்து உயிரியல் விஞ்ஞானப் பிரிவிலிருந்து 08 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களுள் 07 மாணவிகள் மூன்று பாடங்களிலும் 01 மாணவி இரண்டு பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர். இம்மாணவிகளுள் M.A பாத்திமா சனீஜா எனும் மாணவி 3A சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தர வரிசையில் 5 ஆம் நிலையினையும் அகில இலங்கை தர வரிசையில் 121 ஆம் நிலையினையும் பெற்றுள்ளார்.
அத்துடன் வர்த்தகப் பிரிவில் A.J.F. ஜவ்ஸியா பேகம் மற்றும் M.M. பாத்திமா நஸீஹா ஆகிய இரு மாணவிகளும் முறையே 3A சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தர வரிசையில் 6, 33 ஆம் நிலைகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
மேலும் கலைப்பிரிவில் K.L. பாத்திமா சுஹைலா, M.I. பாத்திமா பஸீஹா மற்றும் M.R. பாத்திமா ஸமா ஆகிய மூன்று மாணவிகளும் முறையே 2A 1B சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தர வரிசையில் 9,17,18 ஆம் நிலைகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.