
இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிலையமான SLIIT முதற்தடவையாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC)அங்கீகாரம் பெற்ற பொறியியல் இளமாணிப் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கவுள்ளது. கடந்த 16ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இப்புதிய பொறியியல் இளமாணிப் பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டமானது அறிமுகம் செய்துவைக்;கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இலங்கையில் முதற்தர பட்டப்படிப்புகளை வழங்கி வரும் SLIIT நிலையமானது, தமது கல்விசார் திட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பு கற்கை நெறிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைபெற்ற இலங்கையின் ஒரேயொரு தனியார் உயர்கல்வி நிலையமாக SLIIT திகழ்வதோடு, பொதுநலவாய பல்கலைக்கழக கூட்டுத்தாபனத்தின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ளது. SLIIT கல்வி நிலையமானது, கட்டுமான பொறியியல், Electrical மற்றும் Electronic பொறியியல், Mechanical Engineering மற்றும் Materials Engineering போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் நீண்டகால கல்விசார் பங்காளர்களாகிய அவுஸ்திரேலியாவின் கர்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின்; ஸெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பொறியியல் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
நாட்டில் அபிவிருத்தி மற்றும் புதிய திட்டங்கள் முன்னெடுக்கும் இவ்வேளையில், நாட்டின் தனியார் மற்றும் அரசாங்கத் துறையில் பொறியியளாளர்களுக்கான கேள்வி அதிகமாக காணப்படுகிறது என SLIIT நிறுவனத்தின் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார். மேலும் அவர் இப்புதிய பொறியியல் பட்டப்படிப்பானது நாட்டில் நிலவும் உயர்தகைமை கொண்ட பொறியியலாளர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதாக அமையும்;' என்றார். இலங்கையின் மூன்றாம் நிலைக்கல்வித் தேவையை நிறைவேற்ற SLIIT ஆர்வத்துடன் செயற்படும். இதன் காரணமாகவே, UGC அங்கீகாரம் பெற்ற பொறியியல் பட்டப்படிப்புகளை வழங்க எண்ணியுள்ளது' என்றார்.
மேலும் அவர் 'SLIIT நிலையத்தின் கல்விசார் மற்றும் உள்நாட்டு துறைகளுடனான பங்காண்மை ஊடாக தமது செயல்திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை இப் பொறியியல் பட்டப்படிப்பினை பயிலும்; மாணவர்கள் பெற்றுக் கொள்ளமுடியும். இத்துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்தகைமைகளை மேம்படுத்தி தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சரியான வழிப்பாதையை மாணவர்களிற்கு ஏற்படுத்திக் கொடுத்தல் எமது திட்டமாகும்' என்றார்.
இந் நிகழ்ச்சியில் SLIIT நிலையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில் 'ஆரம்ப காலத்தில் பொறியியல் கல்வியானது கற்பிக்கும் தொழிற்துறையாக கருதப்படவில்லை. மனித இனத்திற்கு செல்வத்தை அளிக்கும் துறையாக பொறியியல் துறை காணப்படுகிறது. பொறியியல் துறையை பொறுத்தவரை நாளுக்கு நாள் தகவல்களை புதுப்பித்துக் கொள்ளல் வேண்டும். பொறியியல் பட்டதாரியாக வர விரும்பும் ஒருவர் பொறியியல் துறைசார்ந்த அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியமானதாகும். இதன் காரணமாகவே, பொறியியல் துறையானது 'கற்கும் தொழில்' ஆக கருதப்படுகிறது என்றார்.
மேலும் பேராசிரியர் கருணாரத்ன 'இக் கல்வி நிலையத்தின் ஊடாக கடந்த காலங்களில் 6000 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் 15000 IT தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இச் சாதனையை எதிர்காலத்தில் பொறியியற் துறையிலும்; நிலைநாட்ட எண்ணியுள்ளோம்' என்றார்.
கல்வி நிலையத்தில் கற்கும் மாணவர்கள் இத்துறையில் காணப்படும் கேள்விகளுக்கு அமைய திறமை வாய்ந்தவர்களாக காணப்படுவர். இப்புதிய பாடத்திட்டமானது துறை சார்ந்த பங்காண்மை மற்றும் திறமையான ஆசிரியர் பீடத்தின்; துணையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் பாடத்திட்டமானது வாஷிங்டன் ஒப்பந்த வழிகாட்டல்களுக்கு அமைய UGC யின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இப்பிரிவில் தகைமையுள்ள பேராசிரியர்கள் பணியாற்றுவதுடன், மேலதிகமாக அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் துறைசார் நிபுணர்களாக உள்ள சிரேஷ்ட பணியாளர்கள் வெளிக்கள முறை அடிப்படையில் வருகை தருகின்றனர்.
2013ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் SLIIT நிலையத்தில் புதிய பொறியியற்; பிரிவுக்கான கட்டட நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்புதிய கட்டிடமானது 7000m2 நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமானது, கட்டடப் பொறியியல், இலத்திரனியல் பொறியியல் ஆய்வுகூடம், Materials Engineering ஆய்வுகூடம், சொற்பொழிவு அறை, பயிற்சி வகுப்பறைகள், Design ஸ்டூடியோ, நூலகசாலை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையமாக SLIIT திகழ்கிறது. இக் கல்வி நிலையத்தின் ஊடாக 18,000 தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். SLIIT நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்;ட கல்விசார் தகைமைகள் ஊடாக பட்டதாரிகள் பலர் வியாபாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னோடிகளாக உள்ளனர். மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.sliit.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.