அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, February 3, 2013

இலங்கை முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் கலாநிதி ரீ.பீ.ஜாயா, கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகியோரின் அளப்பரிய பணிகள்

கலாநிதி ரீ.பீ. ஜாயாவினதும், கலாநிதி ஏ. எம். ஏ. அஸீனதும் நாமங்கள் இந்நாட்டின் கல்வி வரலாற்றில் குறிப்பாக முஸ்லீம் கல்வி வரலாற்றில் நீக்கமற நிலைத்து நிற்கும் பெயர்களாகும்.

இவ்விரு பெரியார்களும் சமூகத்தைப் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றுவதில் அரும்பணிகளை மேற்கொண்டனர். “தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது பேரரசுவாதிகளின் பிடியிலிருந்து மீள்வதற்கு எத்தியாகத்தையும் புரிவதற்கு கலாநிதி ரீ.பீ. ஜாயா சித்தமாக இருந்தார்.

கலாநிதி ரீ.பீ. ஜாயா இலங்கையின் தேசிய கல்வித்துறைக்கு மகத்தான சேவையாற்றினர். ஆனந்தா போன்ற பெளத்த கல்விக் கூடங்களில் சேர்ந்து பிலிப் குணவர்த்தனா போன்ற திறமைமிக்க மாணவர்களை தோற்றுவிப்பதில் அயராது பாடுபட்டு உழைத்தார். கலாநிதி பீ.டீ.எஸ். குலரத்தினவின் நெறியாள்கையில் ஸாஹிராக் கல்லூரியை தோற்றுவித்தமையை சிங்கள பெளத்த பெரும்பான்மையைக் கொண்ட எமது நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் கடமைகளுக்கு முன்மாதிரியாகக் கொள்ளலாமென” அன்றைய கல்வி, கலாசார, தகவல்துறை அமைச்சர் டபிளியூ ஜே. எம். லொக்குபண்டார கலாநிதி ரீ.பீ. ஜாயாவின் நூறாவது பிறந்த தினவிழாவின் போது குறிப்பிட்டமை இன்றும் பசுமை நினைவாக உள்ளது.

கொழும்பு ஸாஹிராவில் அதிபராக பதவி வகித்த கலாநிதி ஜாயா, முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டுக்காக தியாகபூர்வமாகப் பாடுபட்டார்.

1921ல் கலாநிதி ஜாயா ஸாஹிராவை பொறுப்பேற்ற போது ஸாஹிராவின் நிலை மிகப் பரிதாபகரமாக இருந்தது. 06 ஆசிரியர்களும் 59 மாணவர்களும் மட்டுமே இருந்தனர். இரு தசாப்தங்களில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் ஸாஹிரா பிரகாசித்தது.

முஸ்லிம் பெண் கல்வியில் கலாநிதி ஜாயா பெரும் ஆர்வம் செலுத்தினார். முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கல்வியை அவர் முன்னேற்ற நினைத்தார்.

“நாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் இருந்து பெறுவதற்குரிய உயர் நலன்களையும், கலாசார மறுமலர்ச்சியையும் எமது தாய்மாருக்கும், மனைவிமாருக்கும் நாம் மறுக்க வேண்டுமா?” என கலாநிதி ஜாயா இலங்கை முஸ்லிம் சங்கத்தில் பேசும் போது வினா எழுப்பினார்.

கொழும்பு ஆனந்தாவின் மேலைத்தேய இலக்கிய, வரலாற்றுத் துறை ஆசிரியராக, பின்னர் ஸாஹிராவின் அதிபராக, கொழும்பு ஹமீதியாவில் பொது முகாமையாளராக கலாநிதி ஜாயா சேவையாற்றினார்.

ஸாஹிராவில் இலவச இராப் பாடசாலையை ஸ்தாபிப்பதிலும் இவர் பங்கேற்றவர். கொழும்பில் கைரியா முஸ்லிம் மகளிர் பாடசாலையை ஆரம்பிப்பதிலும், நிர்வாகிப்பதிலும் இவர் ஒத்துழைத்தார்.

டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை முகாமையாளராகவும் இவர் பணியாற்றினார். ஸாஹிராவின் கிளைகளை நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உருவாக்கினார். அளுத்கமை, வேகந்தை, புத்தளம், கம்பளை, மாத்தளை ஆகிய இடங்களில் ஸாஹிராக் கிளைகள் உருவாகின.

அட்டாளைச்சேனை, அளுத்கமை ஆகிய இடங்களில் முஸ்லிம் ஆசிரியர் கலாசாலைகள் உருவாகுவதிலும் கலாநிதி ஜாயா பங்கேற்றார்.

அரசியல் துறையிலும் பிரகாசித்த தலைவர் ஜாயா, இந்நாட்டின் தேசிய வீர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகிறார். அரசியல் துறை மூலமும் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஜாயா அரும் சேவைகளை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, முஸ்லிம் லீக், முஸ்லிம் கல்விச்சகாய நிதி, அகில இலங்கை ஆசிரியர் சகாயச் சங்கம், கொழும்பு ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தலைமையாசிரியர் மாநாடு போன்றவற்றின் தலைமைத்துவத்தை கலாநிதி ஜாயா பொறுப்பேற்று நடத்தினார்.

மலையகத்தில் பிறந்தவர் கலாநிதி ரீ.பீ. ஜாயா. வடபுலத்தில் பிறந்தவர் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ். இந்த இரு கனவான்களும் முழுநாட்டுக்கும் கல்விச் சேவைகளைத் தொடர்ந்தனர். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் அறிஞர் அஸீஸ் அதிபராக இருந்த காலம் ஸாஹிராவின் “பொற்காலம்” எனக் கொள்ளப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் சமூகத் தலைவர்கள் மேடைகளில் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாகக் கொண்டனர். ஆனால் அறிஞர் அசீஸோ தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கொண்டார்.

இஸ்லாமிய இலக்கியம், அரபுத்தமிழ் போன்றவை இவரின் நெஞ்சுக்கு அண்மித்தன. முஸ்லிம் சமூகத்தின் பல்துறை வளர்ச்சிக்கும் அடித்தளம் இடும் கலாநிலையமாக அறிஞர் அசீஸ் ஸாஹிராவைப்பார்த்தார். பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுத்தார்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பூரண பங்களிப்பை வழங்க வேண்டுமென்ற எண்ணம் அkஸிடம் குடிகொண்டிருந்தது.

முஸ்லிம் மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கும் இலங்கை முஸ்லிம் கல்விக் சகாயநிதியை 1945ல் அசீஸ் அவர்கள் ஆரம்பித்தார். இதற்கான முன்னோடி முயற்சி கல்முனையிலேயே அவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அறிஞர் அசீஸ் சிறந்த ஒரு மாணவர் கூட்டத்தை உருவாக்கினார். அந்த மாணவர்கள் இன்று உள்ளூரினும், வெளி உலகிலும் நன்றாக பிரகாசித்து ஜொலிக்கின்றனர். 1911ல் பிறந்து 1973ல் மறைந்த இந்தப் பெரியாரின் வாழ்வு 62 ஆண்டுகள் மட்டுமே இருந்தது. இந்தக் குறுகிய காலத்தில் அவரின் பணிகள் நவீன வரலாற்றின் அழியாச் சுவடுகளாகப் பிரகாசிக்கின்றன.

“அறிவே சக்தி” என்று அறிஞர் பிரன்சிஸ்பேகனின் கூற்றை அறிஞர் அசீஸ் அடிக்கடி மேற்கோளாகக் காட்டுவார். பிறப்பு முதல் இறப்பு வரை அறிவைத்தேடிக் கொள்ளுங்கள்” என்ற நபி முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளையும் அவர் எப்போதும் சொல்வார்.

கலாநிதி ரீ.பீ. ஜாயா கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தமக்குப் பின்பு பொறுப்பேற்கத் தக்கவரென கண்டு அறிஞர் அசீஸ¤க்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு ஸாஹிராவில் புதியதொரு தலைமுறைக்கு அவர் விடுத்த அழைப்பாகவே அமைந்தது.

ஜாமிஆ நளிமிய்யா என்ற முஸ்லிம் கலாநிலையம் முஸ்லிம்களுக்காக உருவாகியதென்றால் அது அறிஞர் அசீஸின் பெருமுயற்சியால் தான் எனலாம். “ஜாமிஆ” அறிஞர் அசீஸின் எண்ணகருவாய் அமைந்தது. அசீஸின் வாழ்வில் இறுதிப் பெரும் பணியாக ஜாமிஆவின் ஸ்தாபிதம் அமைந்தது. இன்று ஜாமிஆ நளிமிய்யா அறிவுச் சமூகமொன்றை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

அறிஞர் அசீஸ் ஸாஹிராவில் புதுயுகம் படைத்தார். ஆசிரியர்கள் மாணவர்கள், மெளலவிமார்கள், எழுத்தாளர்கள் போன்றோருடன் அவர் நெருங்கி உறவுகளைத் தொடர்ந்தார்.

முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் இந்த அறிஞரின் பங்களிப்பும் அரியது. அறிஞர் சித்திலெப்பை, நீதியரசர் எம். ரீ. அக்பர், சேர்ராசீக் பரீத் போன்ற தலைவர்கள் பேணுதலோடு ஊக்குவித்த பெண் கல்வியை உயர்நிலைக்கு இட்டுச் செல்ல அடித்தளம் இட்டோருள் அறிஞர் அசீஸ் முக்கியமானவர்.

1944ல் அறிஞர் அசீஸ் நிகழ்த்திய ஓர் உரை பெண்கல்வி பற்றிய அவரின் சிந்தனைப் போக்கை தெளிவாக விளக்கியது. முஸ்லிம் பெண்களுக்கு ஆசிரிய பயிற்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் அசீஸ் நாட்டம் கொண்டார். கல்வி அமைச்சரைச் சந்தித்த அறிஞர் அசீஸ் முஸ்லிம் மகளிருக்கு ஆசிரியர் பயிற்சிக்கான விசேட கல்லூரி அவசரத் தேவை என வற்புறுத்திக் கூறினார். அறிஞர் அசீஸின் முயற்சிகளைத் தொடர்ந்து சேர்ராசீக் பரீத் பாராளுமன்றத்தில் இவ் விடயமாக பிரஸ்தாபித்தார். இதன் எதிரொலியாக 1948இல் முஸ்லிம் மகளிர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி உருவானது.

இவ்விரு அறிஞர்களின் கல்விப் பணிகள் காலத்தால் மறையாதவை. நின்று நிலைக்கும் பசுமை நினைவுகள் அவை.

இந்த அறிஞர் பெருமக்கள் காணத்துடித்த கல்வி மேம்பாட்டுச் சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கமாக அமைய வேண்டும். வளரும் இளம் தலைமுறையினரும் இவ்விரு பெரியார்களின் வாழ்வு முறைகளை அறிந்து பின்பற்றி உயர முயல வேண்டும்.