புதிய கல்வி ஆண்டில் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம் நேற்று திருகோணமலை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மாகாண கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வைபவம் திருகோணமலை மாதுமையம்மாள் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
திருகோணமலையில் தேசிய வைபவம் இடம்பெற்றமைக்கு சமாந்தரமாக நாடு முழுவதிலும் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் வைபவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வுகளில் கடந்த வருடம் பாடசாலையில் இணைந்த மாணவர்கள் புதிய மாணவர்களை பலூன்கள், இனிப்புப் பண்டங்களை வழங்கி வரவேற்றனர்.
நாடு முழுவதிலும் நடைபெற்ற நிகழ்வுகளில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்ததுடன், புதிய மாணவர்களுக்குப் பரிசில் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
source- thinakaran