AL HAJ MUHAMMAD ISMAIL MUHAMMAD NALEEM J.P
Name : Mohamed Naleem
Date of Birth : 04-April-1933
Place of Birth : Beruwala, Sri Lanka
Father’s Name : Mohamed Ismailபேருவளையில் அமைந்திருக்கும் ஜாமிஆ நளீமிய்யாவின் எட்டாவது பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஞாயிற்றக்கிழமை (27-01-2013) அன்று மாலை 4.00 மணிக்கு நடை பெறவுள்ளது.
165 பேர் அஷ்ஷெய்க் பட்டம் பெறும் இப்பட்டமளிப்பு விழா ஜாமிஆ நளீமிய்யாவின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் பட்டமளிப்பு விழா உரையை முன்னாள் சட்டமா அதிபரும், முன்னாள் சட்டத் தரணிகள் சங்கத் தலைவரும், அஹதியா சம்மேளனத்தின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் ஷிப்லி அசீஸ் நிகழ்த்தவுள்ளார்.
மேற்படி விழாவில் பல நாடுகளது தூதுவர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விழாவின்போது ஜாமிஆ நளீமிய்யா ஸ்தாபிக்கப்பட்டு நாற்பது வருட பூர்த்தியை முன்னிட்ட உத்தியோகபூர்வ பிரகடனமும் இடம்பெறும்.