அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, January 25, 2013

வினைத்திறனான கற்றல் நடவடிக்கைகள்




சிஜாபா சினாம் அஸ்ரப்(யூனானி மருத்துவ பீடம், கொழும்பு)

பிள்ளைகள் வினைத்திறனோடு கற்பதற்கு ஆரோக்கியம் மிக முக்கியமாகும். ஆரோக்கியம் என்பது உடல், உள ஆரோக்கியத்தைக் குறிக்கும். இவற்றை பராமரிப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது.

மனவெழுச்சி சமநிலையில் உள்ள பிள்ளைகள் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். மாணவர்களின் மனவெழுச்சி சமநிலையைப் பராமரிப்பதில் ஆசிரியர்களின் பொறுப்பை விட பெற்றோரின் பொறுப்பு முக்கியமானது. வினைத்திறனான கற்றலில் மூன்று பிரதான கட்டங்கள் இருக்கின்றன.

01. எப்படி வினைத்திறனாகக் கற்பது?

02. எவ்வாறு நீண்ட நாட்களுக்கு ஞாபகம் வைத்திருப்பது?

03. எவ்வாறு பரீட்சையில் உயர் பெறுபேற்றைப் பெறுவது?


உண்மையிலேயே உயர் தரப் பரீட்சை வரையுள்ள பரீட்சைகள் அனைத்துமே போட்டிப் பரீட்சைகளாகும். இதனால் பரீட்சை இறுதிப் பெறுபேறுகள் மிக முக்கியம் என்பதால் எம் முழுக் கவனமும் இறுதிப் பெறுபேறுகளில்தான் உள்ளது. சில மாணவர்கள் சாதாரணமாக மிகத் திறமையாகக் கற்பார்கள். சில மாணவர்கள் கற்றவற்றை ஞாபகம் வைத்திருப்பதில் மிக வல்லவர்கள். ஆனால், பரீட்சைக்கு முகம்கொடுத்து, உயர் பெறுபேறுகளைப் பெறமாட்டார்கள். சில மாணவர்கள் சுமாராக பத்து உயர் பெறுபேறுகளை மிக இலகுவாகப் பெற்றக்கொள்வாரகள். இது எப்படி சாத்தியமாகின்றது என்று யோசிக்கலாம். ஆம் எல்லோருக்கும் அதனை சாத்தியம் ஆக்கலாம்.

முதலில் கற்றலுக்கு இடைஞ்சலான விடயங்களை ஆராய்வோம்.

மொழிகள் மற்றும் கல்வித் திட்டத்திலுள்ள மாணவர்களுக்கான குழப்பங்கள்:

சிறுபராயம் முதல் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று விட்டு இலங்கை கல்வித் திட்டத்தின் கீழ் அமைந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுப்பது என்பது மிகச் சிரமமான ஒன்று என்று பெற்றோர்கள் உணர வேண்டும்.

க.பொ.த. சாதாரண தரம் கற்கும் போதே தனியார் கல்வியின் பக்கம் ஆர்வம் காட்டுதல். உ-ம்: CIMA, AAT, QS இந்தக் கல்விகள் அனைத்தும் வசதி கூடிய மாணவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

* மாணவர்களின் பொடு போக்குத் தன்மை

* வீணான செயல்களில் நேர விரயம் செய்தல்: தொலைக் காட்சி, TV Game, விளையாட்டுகள், கையடக்கத் தொலைபேசி என்பவற்றின் அதீத பயன்பாடு.

* குடும்பத்தின் பொருளா தார பிரச்சினைகளுக்காக வெளி நாடு செல்ல வேண்டிய சூழ் நிலை.

* கல்வியினை பெற்றுக் கொள்வதில் உள்ள அதீத போட்டு.

* உளவியல் சார் நோய்கள்: Pshychosometic disorders அதாவது, மருத்துவ ரீதியாக நிரூபிக்கக் கூடியளவு நோயோ அல்லது உண்மையிலேயே நோய்களுக்கான காரணங்களோ இல்லாமல் உடலில் நோய் நிலமையை உணர்தல்.

- தலைவலி: மன உளைச்சல் அதிகமாகும்போது உருவாகின்றது. இது Tension Headache என்பர்.

- முதுகுவலி: இது படிக்கும்போது ஏற்படும் இருக்கை நிலைகளின் தலைமையினால் ஏற்படலாம்.

- வயிற்றுக் கோளாறு: பரீட்சை நெருங்கும்போது வயிற்றெரிவு போல் ஏற்படலாம். Gastritis எனவும் சொல்லலாம். உணவு வேளைகள் தவறவிடப் படுகின்றமையினாலும் ஏற்படலாம். மனவெழுச்சி சார் நோய் அறிகுறிகள் அல்லது இவ்வாறான நோய் நிலைமைகள் எந்த மருந்து வகைகளினாலும் குணமாகாமல் பரீட்சைகள் முடிந்த கணத்திலேயே பறந்து போய்விடலாம். அதற்காக அலட்சியம் செய்தலும் கூடாது.

* கற்றல் முறைகள், வினைத்திறனான முறைகள் தெரியாதிருத்தல்: இதனையே நாம் விரிவாக இங்கே ஆராய விருக்கின்றோம்.

கற்பதற்கு முதல்படியாக உள ரீதியாக மிகச் சரியாக தயாராக வேண்டும்.
இலக்கைத் தீர்மானித்தல்
உறுதிகொள்ளல்
காலத்தை வரையறை செய்தல்
முயற்சி செய்தல்.

இலக்கை தீர்மானித்தல்


நான் இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும் என்பதல்ல. அதை தீர்மானிப்பது எம்மைப் படைத்தவன். நான் இப்போது க.பொ.த. சாதாரண தர பரீட்சை அல்லது க.பொ.த. உயர் தரப் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றேன். கல்வியை ஒழுங்காகக் கற்று பரீட்சையில் உயர் பெறுபேற்றைப் பெற வேண்டும். வேறு வகை கவனக் கலைப்புகளில் நேரத்தை வீணாக்கக் கூடாது. குடும்பத்தின் எதிர் பார்ப்பு, சூழல், கல்வியின் முக்கியத்துவம் என்பவற்றில் மட்டும் கவனத்தைச் செலுத்துதல்.

உறுதிகொள்ளல்:


நான் உறுதியாக இருக்கின்றேன். எனது நிறைவுகள், குறைவுகளில் நான் தெளிவாக இருக்கின்றேன். தடைகளை உடைக்க முடியும் என்று உறுதி கொள்ளல். Yes I can என்று தூங்கு முன் தனது இயலாமைகளை இயலுமாக்க முடியும் என்று வாய்மொழி மூலம் உறுதிகொள்ளல். தூங்கு முன் எந்த விடயத்தை உறுதி கொள்கின்றோமோ அந்த விடயம் ஆழ்மனத்திற்குள் செல்லும் என்பது ஆய்வாகும்.

காலத்தை வரையறுத்தல்:

இதில் பல விடயங்கள் உள் ளடங்குகின்றன. பரீட்சைக்கு உள்ள நாட்களை கணக்கிடல் இயலுமான மற்றும் இயலாமையான பாடங்கள் எவை என வேறு பிரித்தல், இயலாத பாடங்களுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்தல். உதாரணமாக, பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லல், அதிக பயிற்சிகளை சுயமாக செய்தல், சந்தேகங்களை குறித்து வைத்து தெளிவுபெறல்.

சுயவிசாரணை கட்டாயம் செய்தல்: பரீட்சைக்கு 2 வாரங்களுக்கு முன்பதாக அனைத்துப் பாடங்களையும் ஒருமுறையாவது படித்து முடித்திருத்தல்.
source-meeelparvai