(அபூ அஹ்ராஸ்)
வெளியிடப்பட்டுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி இணையத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிண்ணியாவைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறினை கிண்ணியா தேசிய பாடசாலை, கிண்ணியா மகளிர் மகாவித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்.
விஞ்ஞான பிரிவில் கிண்ணியா தேசிய பாடசாலை மாணவன் ஐயூப் அர்சாத், திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தையும், மகளிர் மகாவித்தியாலய மாணவி ரவ்பீக் லிக்கா ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை நஸீர் நஸ்ரின,; இரண்டாமிடத்தினை அஸீர் பாத்திமா முனாசிர், சாஹிர் சமீரா ஐந்தாமிடத்தினையும் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் பெற்றுள்ளனர்.
இம்முறை க.பொ.த.உயர் தர பெறுபேறுகளின் பிரகாரம் கணித விஞ்ஞான, கலை, வர்த்தக பிரிவுகளில் கிண்ணியா வலய பாடசாலைகளில் அதிகமான மாணவர்கள் தெரிவாகியுள்ளதாக தெரியவருகின்றன.