அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, January 6, 2013

கற்றதை நினைவில் வைத்துக்கொள்ள (remembering what you have read) சில டிப்ஸ்!



தினமும் பல செய்திகளை நாம் தெரிந்து கொள்கிறோம், கற்றுக் கொள்கிறோம். அவற்றில் அவசியமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளநினைப்போம். ஆனால் மறந்துவிடும். காரணம், கற்கும் பழக்கத்தைக்கடைபிடிக்கும் நாம், கற்றதை நினைவில் வைத்திருக்கும் வழிமுறைகளைதெரியாமலும், சரிவர கடைபிடிக்காமலும் இருப்பதுதான்.

ஆதாலால் கற்பதைநினைவில் வைத்துக் கொள்ள சில தகல்களை தெரிந்து கொள்வோம்…வாருங்கள்…

மனிதனின் நினைவாற்றல்!

ஒரு மனிதன், அரைமணி நேரத்தில் தான் பெற்ற விவரங்களில் 40 சதவீதத்தை மறந்துவிடுகிறான் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. மறுநாள்அவன் 34சதவீதத்தையே நினைவில் கொள்கிறான். மூன்று நாட்களுக்குப் பின்னர்அவனால் 25சதவீதத்தை நினைவில் தக்கவைக்க முடிகிறது. ஆரம்பநாட்களுக்குப் பின் நினைவு தீவிரமாக வீழ்ச்சியடைந்த, கிடைமட்டமாகஓடுகிறது.

திருப்புதல்


மீண்டும் மீண்டும் கூறுதல் அல்லது படித்தலே நினைவில் நிறுத்தலின் அடிப்படை. ஒரு விஷயத்தைக் கற்றபிறகு பின்னர் அதை 15 -20நிமிடங்களுக்குப் பின்பும், 8 – 9மணி நேரத்திலும், 24மணிக்குப் பின்பும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம். படுக்கைக்குச் செல்வதற்கு 15 -20நிமிடங்களுக்கு முன்னரும், காலை படுக்கையை விட்டு எழுந்தவுடனும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்ப்பது பயனளிக்கும்.


முறையான ஓய்வும் முக முக்கியமானதாகும். 30நிமிடங்கள் முழுமையாக வேலையின்றி இருப்பவர்கள் தாம் காண்பவற்றில் 50 – 55சதவீதத்தை நினைவுபடுத்திக் கூறிவிட முடியும். ஆனால் அந்த நேரத்தில் வேறு ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் 25சதவீதத்தையே மீண்டம் கூற முடியும் என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.

புரிதல்!

உங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிரமாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும்….

நினைவாற்றல் 20 – 25வயது வரை வளர்ச்சியடைகிறது. 40 -45வயது வரை அது நிலையாக நீடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75சதவீதம் நமது 25வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.