சவூதியில் நடைபெற்று முடிந்த சர்வதேச அல்-குர்ஆன் மனனப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற 14வயது இலங்கை மாணவன் அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கானை காத்தான்குடி வாழ் மக்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப்பள்ளிவாயலில் நடைபெற்றது.
இங்கு சர்வதேச அல்-குர்ஆன் மனனப்போட்டியில் முதலாமிடத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை மாணவன் அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கான் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இப்பாராட்டு வைபவத்தில் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்
(பளுலுல்லாஹ் பர்ஹான்)