அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Wednesday, January 23, 2013

உயர்தரப் பாடத்திட்டத்தில் ஐந்தாவது துறையாக அறிமுகமாகும் தொழில்நுட்பம்!

இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும் தமது ஆர்வத்தினடிப்படையில் உயர்தரத்தில் தொழில்நுட்பத்தினை ஒரு பாடநெறியாக தெரிவுசெய்ய முடியுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றாத அல்லது பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களும் தொடருவதற்கு ஏற்றவகையிலான செயற்திட்டங்கள் இவ்வருடம் முதல் வலுப்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வியமைச்சு, உயர் கல்வியமைச்சு மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து இதற்கான வேலைத் திட்டங்களை வகுத்துள்ளன. இது தொடர்பில் விளக்க மளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கல்வியமைச்சில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இணைந்து உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் மொஹான்லால் கிரேரு ஆகியோரும் கலந்துகொண்டனர். கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றம் குறித்து இவர்கள் விளக்க மளித்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புக்கு ஏற்ற வகையில் உயர்தரப் பாடத்திட்டத்தில் தொழில்நுட்பம் ஒரு புதிய பாடநெறியாக அறிமுகப்படுத் தப்படுகிறது. இதுவரை இருந்து வந்த விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை ஆகிய பாடநெறிகளுக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. உயர்தரம் கற்பிக்கப்படும் அனைத்து பாடசாலைகளிலும் இப்பாடநெறியினை பின்பற்ற முடியும். திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இதற்கென விசேடமாக 300 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

என்.வி.க்யூ

இதேவேளை, மாணவர்களிடையே என்.வி.க்யூ பாடநெறியை முறையாக கொண்டு செல்லும் வகையில் கல்வியமைச்சு இளைஞர் விவகார மற்றும் திறன் அபி விருத்தி அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் திறன் அபிவிருத்திக்கான என்.வி.க்யூ பாடநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளதென மொஹான்லால் கிரேரு எம்.பி தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரணதர அல்லது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்கள் இப்பாடநெறியினை பின்பற்ற முடியும். என்.வி.க்யூ தரம் 5 வரை கற்கும் மாணவர்கள் குறித்த துறையில் டிப்ளோமா தரச் சான்றிதழைப் பெறமுடியும். தரம் 6ஐ பூர்த்திசெய்வதன் மூலம் உயர்தர டிப்ளோமாவை பெற்றுக்கொள்வதுடன் தரம் 7 இல் சித்தியடைவதன் மூலம் அதற்கான பட்டப்படிப்பினை தொடருவதற்கு மாணவர்கள் தகைமை பெறுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதோருக்கு

உயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தாம் விரும்பிய துறையில் பட்டப்படிப்பினை படிப்பதற்கென 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வுள்ளன. இவற்றில் 20 அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. 5 கல்லூரிகள் அரச மற்றும் தனியார் மயப்படுத்தப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

இக்கல்லூரிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இங்கு மாணவர்கள் அவர்களது தகைமைய டிப்படையில் நேரடியாக உயர் டிப்ளோமா மூலம் பட்டப்படிப்பை தொடர சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டினார்.

உயர்கல்வியமைச்சு

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்விக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்.

தற்போது 4.8 சதவீதமே நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை காணப்படுகிறது. அதனை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையிலேயே கல்வித்துறையில் புதிய மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கிலம் கட்டாய பாடமாக்கப்பட்டுள் ளதுடன் ஏனைய பாடநெறிகளை முழு மையாக ஆங்கில மயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வருடந்தோறும் தரம் ஒன்றிற்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இவர்களுள் 25 ஆயிரம் பேரே பல்லைக்கழக அனுமதி பெறுகின்றனர். மிகுதி 3 இலட்சம் மாணவர்களும் 35 ஆயிரம் பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாகவே கல்வியை இடை நிறுத்தி விடுகின்றனர். சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சைக்கு பின்னதாக கல்வியை நிறுத்துகின்றனர் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் உயர்தரத்தில் விஞ்ஞான மற்றும் கணித பாடநெறிகளை தெரிவு செய்வோரை 40 சதவீதத்தாலும் ரிwr>8r துறையினை 35 சதவீதத்தாலும் அதிகரிக்கும் அதேவேளை கலைத்துறையை தெரிவு செய்வோர் வீதத்தை 21 சதவீதத்தால் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.



thinakaran