சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற முடியாது போன மாணவர்களுக்கான விசேட பரீட்சைகள் மூன்று தினங்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெப்ரவரி 9,10 ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த குறித்த விஷேட பரீட்சைகள் தற்போது மூன்று தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பரீட்சைகள் பெப்ரவரி மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் மட்டுமே நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் பரீட்சைகள் விஷேட அமைய மேலும் ஒரு தினம் அதிகரித்து பெப்ரவரி 11ஆம் திகதியும் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைக்கு தோற்ற முடியாது போன மாணவர்கள் தமது பாடசாலை அதிபரை சந்தித்து இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் பெய்த கடும் மழை காரணமான குறித்த தினங்களில் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில், பல மாணவர்களுக்கு தோற்ற முடியாது போனமை குறிப்பிடத்தக்கது..