மழையினால் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்கள், பாடசாலை அதிபர் ஊடாக தமது தரவுகளை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழையினால் டிசம்பர் மாதம் 17,18,19 மற்றும் 20ஆம் திகதிகள் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்காக விசேட பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இந்தப் பரீட்சைகளை பெப்ரவரி 09,10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக தமது தகவல்களை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது தகவல்களை நேற்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0112 786 200, 0112 784 201 அல்லது 0112 784 204 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்துகொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 1911 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி இது தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது