இந்தியாவில் உள்ள முன்னனி பல்கலைக்கழகங்களில் இளமானி, முதுமானி மற்றும் கலாநிதிப் படிப்புக்களை தொடர்வதற்கு 184 புலமைப்பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. மேற்படி புலமைப்பரிசில்களானது பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளியல், வர்த்தகம், விவசாயம், மருத்துவம் மற்றும் கலை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
மேற்படி புலனைப்பரிசிலானது கற்கைநெறிக்கான முழுச் செலவினையும் கற்கை நெறி முடியும் வரை பொறுப்பேற்றுக் கொள்வதுடன் மேலதிகமாக மாதாந்த கொடுப்பனவு, தங்கிடமிட வாடகை கொடுப்பனவு மற்றும் கற்கைநெறிக்கான பாடப்புத்தகம் மற்றும் கற்கைநெறி உபகரணங்கள் அனைத்தினையும் உள்ளடக்கியதாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதுடன் உள்ளுர் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு பயணங்கள் ஆகியன கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புலமைப்பரிசில்களில் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 100 புலமைப்பரிசில்கள் இளமானி பட்டதாரி மாணவர்களுக்கும், மௌலான அசாட் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 50 புலமைப்பரிசில்கள் முதுமானி பட்டப் படிப்பிற்கும், 25 பட்டதாரி படிப்பிற்கான புலமைப்பரிசில்கள் ராஜிவ் காந்தி ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழும், 5 புலமைப்பரிசில்கள் பொதுநாலவாய திட்டத்தின் கீழும் மற்றும் 2 புலமைப்பரிசில்கள் சார்க் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுமானி மற்றும் கலாநிதிப் படிப்புகளுக்காகவும் வழங்கப்படவுள்ளது.
இலங்கை உயர்கல்வி அமைச்சானது தகுதியானவர்களினை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேற்படி விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி பெப்ரவரி 20ம் திகதி ஆகும். விண்ணப்பப் படிவங்களை உயர்கல்வி அமைச்சின் வலைத்தளமான www.mohe.gov.lk இல் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.