Thursday, January 31, 2013
காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவி முஹம்மது அனஸ் பாத்திமா ஸனீஜா விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தி
Thursday, January 31, 2013
News
(உ/த) பரீட்சை -2012 பெறுபேறுகளின் படி காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவி முஹம்மது அனஸ் பாத்திமா ஸனீஜா
விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்திகளையும்
மாவட்ட மட்டத்தில் 5ம் இடத்தையும் பெற்று மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளார் . இம்மாணவி முன்னாள் அல்-ஹஸனாத் வித்தியாலய அதிபரும் ஆங்கில பாட ஆசிரியருமான ஆர்.ரி.எம். அனஸ் மற்றும் மீராபாலிகா வித்தியாலய பிரதி அதிபரான ஜனாபா உம்முபரீதா அனஸ் ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும்2011 ல் இடம்பெற்ற க.பொ.த உ/த பரீட்சையில் இவர்களின் மற்றுமொரு புதல்வியான பாத்திமா ஸீனா இதே பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் 3 பாடங்களில் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்துடன் தேசிய ரீதியிலான SUPER MERIT தெரிவு முறையில்மருத்துவத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.