நிந்தவூர் மதினா மகாவித்தியாலய மாணவன் ஹிதாயத்துல்லாஹ் சாதித்தீன் உயர்தரப்பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை.
நிந்தவூரின் பிரபல எழுத்தாளரும், கவிஞரும், பாடகருமான ஹிதாயத்துல்லாவின் புதல்வாரன சாதித்தீன் எனும் மாணவன் நிந்தவூர் அல்மதீனா மகா வித்தியாலத்தில் வர்த்தகப் பிரிவில் கல்விகற்று இன்று வெளியான உயர்தரப்பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2012 ஆண்டில் உயர்தரப்பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய மட்டத்தில் 181இடத்தையும், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று ஹிதாயத்துல்லா சாதித்தீன் சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் நிந்தவூர் அல்மதீனா மகா வித்தியாலயத்தின் மாணவராவார். இவரது சகோதரர் ஒருவர் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் உயிரியல் பிரிவில் தெரிவு செய்யப்பட்டு வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.