அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Wednesday, January 30, 2013

ஓசோன் படலம் என்றால் என்ன ?

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் இன்று முன்னேற்றம் என்ற போர்வையில் அறிவு வளர்ச்சி என்ற ஏக்கத்தில் சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டு இருக்கிறான். சாகாவரம் பெற்ற பாலித்தீன். பூமியை மலடாக்குகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீரும், புகையும் பூமியையும் வளிமண்டலத்தையும் மாசு அடைய செய்கிறது. காடுகளின் அழிவால் சுற்றுச் சூழல் வெப்பம் அடைந்து பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரு கிறது. இவ்வாறு கடல்மட்டம் உயருவதால் கடற் கரை ஓரங்களில் வளரும் அரிய தாவர இனங் களும் நிலப்பகுதிகளும் அழிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டு கொண்டு இருக்கும் இச்சுற்று சூழல் பாதிப்பினால் மனித இனத்திற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் இயற்கையோடு இணைந்த அனைத்து அமைப்புகளும் அழிவை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

ஓசோன் படலத்தை பற்றி…

ஓசோன் படலத்தைப் பற்றியும், அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஓசோன் படலம் மாசுபடுவதை தடுப்பதற்கான வழி முறைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோனை கண்டறிந்தார். ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள் ஆகும். இதனை வேதி குறியீட்டில் 03 என்பர். ஓசோன் வாயு ஆனது படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. 20யிலிருந்து 25 கி. மீட்டர் வரையிலான உயரம் வரை மிக அடர்த்தியாக உள்ளது. இந்த ஓசோன் படலத்தின் முக்கிய பணி என்ன வென்றால் சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக் கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதா கதிர்களை பூமியை வந்து அடையா வண் ணம் பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.

சேதம் ஏற்படுவது எப்படி?

ஓசோன் படலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது?

உன்னத பணி செய்துக் கொண்டிருக்கும் ஓசோன் படலத்தை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள, முரைப் பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள், போன்றவற்றில் குளோரோ புளோரா கார்பன் என்னும் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் குளோரோ புளோரோ கார்பன் வாயு நிலைத்த நிலையில் நூறு ஆண்டுகள் வரையில் இருக்கும். ஆனால், சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது இது பிரிகிறது. இந்த வேதியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் அழிக்கப்படு கிறது.


தீமைகள்

ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீமைகள்„


உலகம் முழுவதும் வெப்பம்கூடும். இதனால் வளி மண்டலத்தில் மிகுதியான வெப்பம்கூடும். அதிக வெப்பத்தினால் வறட்சிக்காலம் ஆண்டுதோறும் நீடிக்கும். வெப்பம் கூடுதல் ஆக ஆக பனிமலைகளிலுள்ள பனி உருகி திடீர் வெள்ளம் ஏற்படும். கடல் மட்டம் கூடும். இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியின் அளவைக் குறைப்பதோடு கடலோர பகுதிகள் மூழ்கடிக்கப் படும். பருவகாலங்கள் மாறுபட்டு உயிரினங் களும் ஆபத்தை உண்டுபண்ணும். புறா ஊதா கதிரானது ஓசோன் படலத்தால் தடுக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு வந்தால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்ச்சி, தோல் சுருக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் உண்டாக்கின்றன.

ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலா னோர் தோல் புற்று நோயினால் அவதிப்படு கின்றனர். ஓசோன் படலம் 0Š ஒரு விழுக்காடு குறைந்தால் தோல் புற்றுநோய் இரண்டு விழுக்காடு அதிகரிக்கும். மேலும் தாவரங்களின் உற்பத்தி திறனும் குறையும். விலங்கினங்கள் அதிக அளவு பாதிக்கப்படும்.

புற ஊதாக்கதிர்கள் கடலில் பல மைல் தூரம் ஊடுருவிச்சென்று கடல்வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிர்களை கொன்று குவிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பாதிப்புக்கு உள்ளா கின்றது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீய விளைவுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.

ஓசோனை பாதுகாக்க வழிமுறைகள்
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழி முறைகள் பார்ப்போம்.

1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் இந்த பூவுலகை காக் கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என்பதுதான்.

எனவே ஒசோன் படலம் பாதிக்கப்படுவதால் எற்படும் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அகில உலக அளவில் ஒட்டு மொத்தமான கூட்டுறவு முயற்சியும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரவலான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குளோரோ புளோரோ கார் பனை வெளியிடும் சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.