பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதிலிருந்து ஊழியர்களை நீக்குவதற்காகவும் அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் அச்சிடுவதற்காகவும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதன்மூலம், ஒரு நபராலேயே பரீட்சை வினாத்தாள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பொதியிடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்துக்குத் தேவையான இயந்திரங்களை விரைவில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்