இப்பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள் தற்சமயம் கோரப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் அனுமதியளிக்கப்பட்ட சகல மத்ரசாக்களுக்கும் தபால் மூலம் கிடைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி பெப்ரவரி 22ஆம் திகதியாகும்.
இப்பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமக்குரிய விண்ணப்பப்படிவங்களை தபால் மூலம் பெறுவதற்கு, தமது பெயர், முகவரி எழுதப்பட்ட 5 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறைகளை பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொள்கிறார்.
பரீட்சை ஆணையாளர் நாயகம் ,
ஒழுங்கமைப்பு - வெளிநாட்டு பரீட்சைகள் பிரிவு,
இலங்கை பரீட்சை திணைக்களம் ,
பெலவத்தை -பத்தரமுல்லை.
தொலை பேசி இல - 011-2765230
தொலை நகல் இல -011-2784232
இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை நேரடியாக பெற விரும்புபவர்கள் பெப்ரவரி 8ஆம் திகதி வரை பத்தரமுல்லை -பெலவத்தையிலுள்ள பரீட்சை திணைக்கள வெளிநாட்டு பரீட்சைகள் கிளையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
source- news lk