சவூதியில் நடைபெற்ற சர்வதேச அல்-குர்ஆன் மனனப்போட்டியில் 14வயது இலங்கை மாணவன், அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கான் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு நாளை (18ம் திகதி) பிற்பகல் 04.00மணிக்கு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இதேவேளை இந்தநிகழ்வில் சுமார் 53வருடங்களாக காத்தான்குடி வாழ்மக்களுடன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பல உலமாக்களை உருவாக்கிய காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி அதிபர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) விசேட விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
இப்பாராட்டு வைபவத்தில் உலமாக்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.