Saturday, January 19, 2013
தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் நடாத்தப்படும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 டிப்ளோமா கற்iகைநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2013
Saturday, January 19, 2013
EDUCATION GUIDE
இவ்வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1.விண்ணப்பதாரர்களுள் அவர்களுடைய தகைமைகளுக்கும் திறமைகளுக்கும் அமைய கற்கை நெறிகளுக்குதேவையான எண்ணிக்கைகளுக்கு ஏற்ப மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
2. விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பப்படிவத்தை இவ்வறிவித்தலில் காணப்படும் மாதிரிவிண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக 13''ஒ8'' அளவிலான தாளில் தயாரித்துக்கொள்ள வேண்டுமென்றுஅறிவுறுத்தப்படுகிறார்கள். மாதிரி விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி 14 இல் கூறப்பட்டதற்குஇணங்க, ஒவ்வொரு விண்ணப்பப்படிவத்திலும் ரூபா 10 முத்திரை ஒட்டப்பட்டு அதன் மேல் விண்ணப்பதாரர்தனது கையொப்பத்தை இடுவதன் மூலம் அதன் பெறுமதி நீக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
பு{ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 09.02.2013 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவகையில் உரிய தொழில்நுட்பவியல் கல்லூரிப் பணிப்பாளருக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.
3. கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கை நெறியின் பெயர், அதன் குறியீட்டு இலக்கம் என்பன குறிப்பிடப்படல் வேண்டும்.
4. குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. பகுதி நேரம்ஃ மாலைநேர கற்கைநெறிகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூபா 2,000 கட்டணமாக அறவிடப்படும்.
6. சகல கற்கைநெறிகளும் ஆங்கில மொழி மூலம் நடைபெறும்.
7. விண்ணப்பதாரிகளின் கவனத்திற்காக இவ்வறிவித்தலின் இறுதியில் பயிற்சி அட்டவணை ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அவ்வட்டவணையானது பயிற்சி நெறியின் தன்மை, ஒவ்வொரு பயிற்சிநெறிக்கும் தேவைப்படும் தகைமைகள், பயிற்சிநெறிகள் நடாத்தப்படும் கல்லூரிகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. பயிற்சி நெறிகள் நடாத்தப்படவிருக்கும் தொழில்நுடபவியல் கல்லூரிகளின் முகவரிகள், தொழில் நுட்பவியல் கல்லூரி பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன.
8. தொழில் நுட்பக் கல்லூரிகளில் கற்கை நெறிகளைத் தொடர்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பதாரிகள்-
(1) நற்பண்புகள் உடையவராக இருத்தல் வேண்டும்
(2) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
(3) விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போதே அனுமதி பெறுவதற்கு வேண்டிய தகைமைகள்அனைத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
9. தகுதியான பரீட்சார்த்திகள் ஒரு பொது உளச்சார்புப் பரீட்சை மற்றும்ஃ அல்லது நேர்முகப் பரீட்சைப் பெறுபேறுகள் மூலமும் தெரிவு செய்யப்படுவர்.
10. ஏதாவது ஆவணங்களையோ அல்லது அவற்றினது பிரதிகளையோ விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பிக்கக்கூடாது. தமது தகைமையை நிரூபிப்பதற்கு தேவையான ஏற்கக்கூடிய ஆவணங்களை நேர்முகப் பரீட்சையின்போது வழங்கத் தவறும் விண்ணப்பதாரிகள் தகைமையற்றவர்களாகக் கருதப்படுவர்.
11. ழூ முழு நேரக் கற்கை நெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு தமது குடும்ப வருமான நிலைமைகளுக்கேற்ப கல்லூரி வகுப்புக்களுக்குச் சமுகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபா 50 வீதம் மாணவர்
உதவிக் கொடுப்பனவாக மாதம் ஒன்றிற்கு ரூபா 1,000 இற்கு மேற்படாது வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்நத, முழுநேரக் கற்கைநெறி மாணவர்கள் வருடமொன்றிற்கு ரூபா 2,500 வீதம் மாணவர் உதவுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
12. சகல ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கும் விண்ணப்பதாரியே முழுப்பொறுப்புடையவராவார். மாற்றம் செய்யப்பட்ட அல்லது பொய்யான அல்லது உண்மையை உறுதி செய்யத் தவறும் ஆவணங்களைச்
சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்.
13. இவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் 2013 ஆம் கல்வி ஆண்டிற்குரிய எல்லா பாடநெறிகளையோ அல்லது குறிப்பிட்ட பாடநெறிகளையோ நடாத்தும் முடிவினை
தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமே மேற்கொள்ளுவார். விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு பயிற்சி நெறிக்கும் தனித்தனியான விண்ணப்பப்படிவங்களை பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
டபிள்ய{. ஏ. ஜயவிக்ரம,
மேலதிக செயலாளர்ஃ பணிப்பாளர் நாயகம் (பதில்),
தொழில்நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களம்.
த. பெ. இல. 557,
ஒல்கொட் மாவத்தை,
கொழும்பு 10.
மாதிரி விண்ணப்பப்படிவம்
தொழில்நுட்பவியல் கல்லூரிகளில தேசிய தொழில்நுட்ப தகைமை மட்டம் 05 டிப்ளோமா கற்கைநெறிகளுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் கல்வியாண்டு 2013
(அலுவலக உபயோகத்திற்கு மட்டும்)
1. விண்ணப்பிக்கும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பெயர் :----.
2. விண்ணப்பிக்கும் கற்கைநெறியின் பெயர் :----.
(முழு நேரம் பகல்ஃ மாலைஃ பகுதி நேரம்)
3. கற்கைநெறியின் குறியீட்டு இல. :---.
4. முதலெழுத்துக்களுடன் விண்ணப்பதாரியின் பெயர் :----.
5. முதலெழுத்துக்களால் குறிக்கப்படும் பெயர்கள் :----.
6. நிரந்தர முகவரி :----.
7. தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் :----. மின்-அஞ்சல் :----.
8. தேசிய அடையாள அட்டை இலக்கம் :----.
9. மாவட்டம் :----. தேர்தல் தொகுதி :----.
பிரதேச செயலாளர் பிரிவு :----.
கிராம அலுவலர் பிரிவு :----.
10. பிறந்த திகதி :----.
2013.01.01 ஆந் திகதியன்று வயது :-
வருடங்கள் :----, மாதங்கள் :----, நாட்கள் :----.
11. பால் (ஆண்ஃ பெண்) :----.
12. அனுமதிக்கான தகைமைகள், வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய உமது தகைமைகளை உரியகூட்டினுள் காட்டுக :-