
சமீர் அகமட்-
கடந்த 2012 ம்ஆண்டு இடம்பெற்ற க.பொ.த.( உ/த) பரீட்சை முடிவுகள் நேற்று மாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இம்முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் நிலை மாணவியாக ஓட்டமவாடி தேசிய பாடசாலையை சேர்ந்த மாணவி தெரிவாகி உள்ளார்.
ஓட்டமாவாடி 3 இல் வசிக்கும் முஹமட் முஹைதீன் ரிஷ்வியா உயிரியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் A தர சித்தியையும், பெளதீகவியலில் B தர சித்தியையும், 1.9711 இசட் வெட்டுப் புள்ளியையும் பெற்று மாவட்டத்தில் முதன் நிலையை பெற்றுள்ளார்.
மேலும் அதே பாடசலையில் கல்வி கற்ற ஓட்டமாவாடி பாடசாலை குறுக்கு வீதியில் வசிக்கும் மொகமட் அக்பர், ரகுமா ஆகியோரின் மகன் முஹமட் அக்பர் இம்சீர் உயிரியல், இரசாயனவியல், பெளதீகவியல் ஆகிய பாடங்களில் B தர சித்தியையும், 1.6120 இசட் வெட்டுப் புள்ளியையும் பெற்று மாவட்டத்தில் ஐந்தாம் நிலையை பெற்றுள்ளார்.
மேற்படி இருவரும் பழைய பாடத் திட்டத்தில் மூன்றாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றி இவர் இப்பெறுபேரைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A தர சித்தியை பெற்றுள்ளனர். ஏ.எஸ்.நௌசாத் மாவட்டத்தில் 03ம் இடத்தையும், எம்.ஐ.எம். பாகீர் மாவட்ட நிலை 20யும் எஸ்.டபிள்யு.எ.சன்ஹர் மாவட்டதில் 31ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.