ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் தகவல் தொழில்நுட்பத்தை அதிகரிக்கும் நிகழ்வு
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனமும் கல்வி அமைச்சின் அறிவுடைச் சமூகத்திற்கான கல்வி செயற்றிட்டமும் (EKSP) தகவல் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இணைந்து நடாத்தும் நிகழ்ச்சியான Innovative Teachers and Students மார்ச் மாதம் 11ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் நாடு தழுவிய ரீதியிலுள்ள பாடசாலைகளை இலக்காக கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக கல்வி அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டமானது பல்வேறு பரிமாணங்களை தாண்டி வெற்றிப்பயணத்தை தொடருகின்றது.
சம்பிரதாய கல்வி முறைமை, கற்பிக்கும் நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு புறம்பாக கல்வியை தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் அறிவுறுத்துவதே நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும். இதன்மூலம் சர்வதேச கல்வி முறைமைக்கேற்ப தம்மை தயார்படுத்திக்கொள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் கிட்டுகின்றது.
இத்திட்டத்தின் பெறுபேறாக நாட்டின் கிராப்புறங்களை சேர்ந்த அநேக பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றமை சிறப்பம்சமாகும்.
ஆசிரியர்களை போன்று மாணவர்களிடையேயும் தகவல் தொடர்பாடல் தொடர்பில் பாரிய ஆவல் ஏற்பட்டுள்ளமையானது பாடசாலையின் கல்வி கற்பித்தல், பயிலுதல் ஆகிய முறைமைகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் Innovative Teachers and Students செயற்றிட்டம் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விசேடமாக வடக்கு கிழக்கு மாணவர்களும் இதில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் கலந்து வெற்றிபெறும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெறுமதி வாய்ந்த பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க கல்வி அமைச்சும் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளது.