-அஸ்ரப் ஏ சமத்-
13வயதிற்குட்பட்ட மாணவர்களை போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் இம் மாணவர்கள் அனைவரும் உடல் ஆரோக்கிய பரீட்சைக்கு உட்படுத்தப்படுவர்.
சகல பாடசாலை மாணவர்களும் மற்றும் உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள சகல கல்வி நிறுவணங்களிலும் உள்ள மாணவர்களும் கட்டாயம் விளையாட்டில் ஈடுபட வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தினை கடந்த (28)ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானநத அளுத்கமகே தெரிவித்தார்.
இம் அமைச்சரவைப் பத்திரத்தினை கல்வியமைச்சு உயர்கல்வியமைச்சு தொழில்நுட்பக் கல்வி சம்பந்தமான அமைச்சுக்கள் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சு சமர்ப்பித்திருந்தது.
பாடசாலை மட்டம், தேசிய மட்டம், வரையிலான போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களது விளையாட்டுத்திறமைகளை மேலும் அபிவிருத்தி செய்து அவ் வீரர்களை தேசிய, சர்வதேச மட்டத்திற்குச் முன்னேற்றுவதே விளையாட்டுத்துறை அமைச்சின் நோக்கமாகும்.
சகல பாடசாலை மாணவர்களும் இனிவரும் காலங்களில் ஏதேனும் ஒரு விளையாட்டுத்துறையில் தம்மை கட்டாயமாக ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும். அத்துடன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் உயர் கல்வியமைச்சின் கீழ் வரும் நிறுவணங்களின் கற்கும் மாணவர்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் ஏதேனும் விளையாட்டுத்துறையை தெரிவு செய்து அதனை மேற்கொள்ளவதற்காக சகல ஏற்பாடுகளும் செய்து கொடுப்பதற்கும் சான்றிதழ் மற்றும் புள்ளிகள் வழங்குவதற்கும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் உயர்கல்வி நிறுவன மாணவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான விளையாட்டுத்துறையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடம் முதல் சகல பாடசாலை மாணவர்களும் விளையாட்டு பாடத்திற்கு ஏதுவான உடல் ஆரோக்கிய மட்டம் குறித்து புள்ளிவிபர நூல் ஒன்றும் வழங்கப்படஉள்ளது. இதன் முலம் வருடாந்தம் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆராய முடியும். என விளையாட்டுத்துறை அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது