சிங்கப்பூர் கல்விச் சேவைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனமான ரப்ல்ஸ் கல்விக் கூட்டுறவுத்தாபனம் இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுத் திணைக்களத்தின் அனுமதியுடன் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.
20 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இத்திட்டம் இலங்கையில் இரண்டாவது வெளிநாட்டுத் தனியார் பல்கலைக்கழகமாக அமையும்.
உயர் கல்வி அமைச்சு ஏற்கனவே அனுமதியளித்துள்ள இத்திட்டம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் கைகூடும் எனவும் இலங்கை வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படும் இடமாகவும் இருப்பதாக ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் பல நாடுகளில் சுமார் 33 கல்வி நிறுவனங்களை நடாத்தி வரும் ரப்ல்ஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.