கல்விப் பொது உயர் தரப் பரீட்சை விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் சனிக்கிழமையுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்ப படிவங்கள் எற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜீ.புஷ்பகுமார தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை ஐந்தாம் ஆண்டிற்கான புலைமைப் பரிசில் பரீட்சை விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் 22ஆம் திகதிக்கு பின்னர் விநியோகிக்கப்படவுள்ளன.