இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு துரிதமாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி 16 வயது பூர்த்தியாகும் மாணவர்களின் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு 16 வயது நிரம்பும் வரை காத்திருக்காது மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க
வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை 16 வயது நிரம்பும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டம் கட்டமாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 16 வயது நிரம்பும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள குறித்த மாணவர்களுக்கு மாத்திரம் தபால் அடையாள அட்டையை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.