(ரூமி முகம்மது முஜாஸ்)
வருடாந்தம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வழங்கப்படுகின்ற அல் ஆகில் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் தகுதியான மாணவர்களிடமிருந்து
கோரப்படுகின்றன. 2011ம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்துக்கு பின்வரும் துறைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
• மருத்துவம்
• பொறியியல்(+ TM, EM)
• கணணி விஞ்ஞானம்(+IT, MIT, ICT, IS, CM, ST, CST, CIS, ITM)
• முகாமைத்துவம்( +PM, MS-TV-)
• விஞ்ஞானம்
30% வீதமான புலமைப்பரிசில் முஸ்லிம் மல்லாதவர்களுக்கும் ஏனைய 70% புலமைப்பரிசில்கள் முஸ்லிம் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன.
தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக் குழுவினால் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கற்றை நெறிக்கான உறுதிப்படுத்தல் கடித்தின் பிரதியொன்றுடன் வேண்டுகோள் கடிதம்(Request Letter) ஒன்றையும் கீழ்வரும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்படிவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Al-Agil Scholarship Fund
23/3, Market Road,
Dharga Town-12090
விண்ணப்படிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி :18th March 2013
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்படிவங்கள் வந்தடைய வேண்டிய இறுதித் திகதி: 30th March 2013 ஆகும். இதன் பிறகு எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேற்படி புலமைப்பரிசில்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேலதிக தகவல்கள் 04.03.2013 (திங்கள்) திகரன்(தமிழ்), Daily News(English), தினமின(சிங்களம்) ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்படும்.