அமைச்சின் அனுமதியின்றி மாணவர்கள் வெளிநாடு செல்ல தடை!
வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கல்வி அமைச்சின் அனுமதியின்றி பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாதென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, பாடசாலைகளில் இடம்பெறும் இணைப் பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டுப் போட்டிகள், நடனம், சங்கீதம், சித்திரம் மற்றும் ஏனைய பயிற்சிகளுக்கு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சினால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2003/20ம் இலக்க சுற்றறிக்கையை மீளவும் வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் கோத்தாபய ஜயரட்னவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கல்வி அமைச்சின் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பாடசாலை மாணவர்களை அனுப்பும் பாடசாலை அதிபர்களுக்கெதிராக மிகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்ட சங்கங்கள், அல்லது இயக்கங்களால் பாடசாலை பிள்ளைகளை வெளிநாட்டு போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுப்பும் போது அவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அச்சங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் மாணவர்களிடம் பணம் அறவிடக்கூடாது.பாடசாலை மட்ட சங்கங்களினால் மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டிய தேவை இருப்பின் குறித்த போட்டியில் நடப்பு ஆண்டில் அல்லது முன்னைய ஆண்டில் வயதுக்குழுகளில் தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
இதற்கான நிதியை பாடசாலை திரட்டும் முறை பற்றி அறிவிக்க வேண்டும். இதற்கென மாணவர்களிடம் நிதி அறவிடக்கூடாது.வெளிநாட்டு பயிற்சி, பங்குபற்றலுக்கென குறித்த நாட்டினால் அழைப்பு விடுக்கப்பட்ட கடிதம், பயணத்தை ஒழுங்கு செய்கின்ற சங்கம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் கடிதம் என்பன கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவை தவிர வெளிநாட்டில் பயிற்சிக்கென செல்லும் மாணவர் பற்றிய மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதுடன் அம்மருத்துவ அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சின் மருத்துவ பணிப்பாளர் அங்கீகரிக்க வேண்டும்.
இவ்வாறான விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படும் அதிபர், ஆசிரியர்களுக்கெதிராக மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.